செய்திகள்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ள இங்கிலாந்து அணி

DIN

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3-வது டெஸ்டை வென்றதன் மூலம் விஸ்டன் கோப்பையைக் கைப்பற்றியுள்ளது இங்கிலாந்து அணி. இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இங்கிலாந்து - மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் ஜூலை 24 அன்று தொடங்கியது. இந்த டெஸ்டை டிரா செய்தால் விஸ்டன் கோப்பையை மேற்கிந்தியத் தீவுகள் அணி தக்கவைத்துக் கொள்ளும். இங்கிலாந்து வெற்றி பெற்றால் தொடரை 2-1 என வென்றுவிடும். அயர்லாந்துடனான ஒரு டெஸ்ட் தொடரைத் தவிர்த்துப் பார்த்தால் கடந்த 5 டெஸ்ட் தொடர்களில் ஒன்றில் மட்டும் தான் இங்கிலாந்து அணி வென்றுள்ளது. அதனால் அந்த அணிக்கு இந்த வெற்றி மிக முக்கியமானதாக இருந்தது. 

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதனால் 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது மேற்கிந்தியத் தீவுகள் அணி. எனினும் 2-வது டெஸ்டை 113 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து அணி. பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் அசத்திய பென் ஸ்டோக்ஸ், ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இதனால் டெஸ்ட் தொடர் 1-1 சமனில் இருந்தது. 3-வது டெஸ்ட், மான்செஸ்டரில் நடைபெற்றது. 

இந்த டெஸ்டின் கடைசி நாளில் 37.1 ஓவர்களில் 129 ரன்களுக்குச் சுருண்டது மேற்கிந்தியத் தீவுகள் அணி. இதனால் 3-வது டெஸ்டை 269 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து அணி விஸ்டன் கோப்பையைக் கைப்பற்றியது. 500 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்து சாதனை படைத்த பிராட், ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். பிராடும் சேஸும் அவரவர் அணியின் தொடர் நாயகர்களாகத் தேர்வு செய்யப்பட்டார்கள். 

இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது இங்கிலாந்து அணி.

டெஸ்ட் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பு 146 புள்ளிகளுடன் 4-ம் இடத்தில் இருந்தது. ஆனால் இரு டெஸ்டுகளில் வெற்றி பெற்று 80 புள்ளிகளைச் சேர்த்துக்கொண்டது. இதனால் 226 புள்ளிகளுடன் இந்தியா (360), ஆஸ்திரேலியா (296) ஆகிய அணிகளின் பின்னால் உள்ளது. மே.இ. தீவுகள் அணி 40 புள்ளிகளுடன் 7-ம் இடத்தில் உள்ளது.

அடுத்ததாக பாகிஸ்தானுக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது இங்கிலாந்து அணி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணங்கான் வெளியீட்டு பணிகள் தீவிரம்!

தென்னிந்தியாவில் பாஜகவுக்கு வரவேற்பு; 100 தொகுதிகளில் வெல்லும்: அமித் ஷா

நத்தத்தில் திடீர் தீ விபத்து: ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்!

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

SCROLL FOR NEXT