செய்திகள்

ஆண் குழந்தைக்குத் தந்தையானார் ஹார்திக் பாண்டியா

பிரபல கிரிக்கெட் வீரர் ஹார்திக் பாண்டியா ஆண் குழந்தைக்குத் தந்தையாகியுள்ளார். 

DIN

பிரபல கிரிக்கெட் வீரர் ஹார்திக் பாண்டியா ஆண் குழந்தைக்குத் தந்தையாகியுள்ளார். 

வீரர் ஹார்திக் பாண்டியா - நடிகை நடாஷா ஸ்டான்கோவிச் ஆகிய இருவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

ஹிந்தி பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை நடாஷா, மும்பையில் வசிக்கும் செர்பியா நாட்டைச் சேர்ந்தவர். நடிப்பு வாய்ப்புக்காக 2012 முதல் இந்தியாவில் வசிக்கும் நடாஷா, சத்யாகிரஹா படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். கிரிக்கெட் வீரர் பாண்டியாவும் நடிகை நடாஷாவும் காதலித்து வந்த நிலையில் புத்தாண்டன்று தனக்கு நடாஷாவுடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக பாண்டியா அறிவித்தார். மும்பை ஊடகம் வெளியிட்டுள்ள தகவலின்படி ஊரடங்குக் காலத்தில் நடாஷாவை பாண்டியா திருமணம் செய்துகொண்டுள்ளார்.

தானும் நடாஷாவும் புதிய உறவை எதிர்பார்ப்பதாக கடந்த மாதம் சமூகவலைத்தளங்களில் பாண்டியா கூறினார்.

இந்நிலையில் ஆண் குழந்தைக்குத் தந்தையாகியுள்ளதாக ட்விட்டரில் பாண்டியா அறிவித்துள்ளார். இதையடுத்து கிரிக்கெட் பிரபலங்களும் ரசிகர்களும் பாண்டியாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு!

மின்னல் தாக்கி சிகிச்சையிலிருந்த சிறுவன் பலி!

ஓசூர் அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

சொல்லப் போனால்... மருந்தெனப்படுவது விஷமானால்...

கனடா வெளியுறவு அமைச்சா் இன்று இந்தியா வருகை: மத்திய அமைச்சா்களுடன் பேச்சு!

SCROLL FOR NEXT