செய்திகள்

பயிற்சியைத் தொடங்கினார் ஆஸி. பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித்!

DIN

கரோனா ஊரடங்கு காரணமாக 3 மாதங்களுக்குப் பிறகு கிரிக்கெட் பயிற்சியைத் தொடங்கியுள்ளார் பிரபல ஆஸி. பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித்.

2020-21 சீஸனுக்காக அட்டவணையை கிரிக்கெட் ஆஸ்திரேலியா சமீபத்தில் வெளியிட்டது. ஆகஸ்ட் மாதம் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 3 ஒருநாள் ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி பங்கேற்கிறது. ஆகஸ்ட் 9 முதல் ஆகஸ்ட் 15 வரை இத்தொடர் நடைபெறுகிறது. அக்டோபர் 4-9 வரை மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக 3 ஆட்டங்கள் டி20 தொடர் நடைபெறுகிறது. நவம்பரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒரு டெஸ்ட் ஆட்டமும் ஜனவரியில் நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள், டி20 தொடர்கள் நடைபெறுகின்றன. இந்த அட்டவணையில் அக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரையிலான டி20 உலகக் கோப்பையும் இடம்பெற்றுள்ளது.

இந்திய அணி டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்பு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. டிசம்பர் 3 முதல் ஜனவரி 7 வரை இரு அணிகளுக்கு இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. அதன்பின்னர் ஜனவரி மாதம்  3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் பங்கேற்கின்றன. கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த அட்டவணைகள் மாறுதலுக்கு உட்பட்டவை என கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

அடுத்து ஏராளமான கிரிக்கெட் தொடர்கள் வரவிருப்பதால் கிரிக்கெட் பயிற்சியைத் தொடங்கியுள்ளார்கள் ஆஸ்திரேலிய வீரர்கள்.

கரோனா ஊரடங்கு காரணமாக 3 மாதங்களுக்குப் பிறகு கிரிக்கெட் பயிற்சியைத் தொடங்கியுள்ளார் பிரபல ஆஸி. பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித். இத்தகவலைச் சமூகவலைத்தளங்களில் அவர் தெரிவித்துள்ளார். 3 மாதங்களுக்குப் பிறகு பயிற்சியைத் தொடங்கியுள்ளேன். இது நல்ல செய்தி. பேட்டை எப்படிப் பிடிப்பது என்பதை மறக்கவில்லை என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

SCROLL FOR NEXT