முகப்பு
செய்திகள்

இங்கிலாந்து கவுண்டி ஆட்டங்கள் 2 மாதங்களுக்கு ஒத்திவைப்பு!

இங்கிலாந்தின் பழைய கிரிக்கெட் போட்டியான கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டி இந்த வருடம் இரு மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Updated On : 21 மார்ச், 2020 at 10:59 AM
படம் - @@ECB_cricket
பகிர்:

இங்கிலாந்தின் பழைய கிரிக்கெட் போட்டியான கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டி இந்த வருடம் இரு மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டி 2020, ஏப்ரல் 12 முதல் ஆரம்பமாக இருந்தது. ஆனால் கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த வருடம் 2 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மே 28 வரை இங்கிலாந்தில் எந்தவொரு தொழில்முறை கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 19 முதல் தர கவுண்டி அணிகள், எம்.சி.சி., தொழில்முறை வீரர்கள் அமைப்பு ஆகியவற்றுடன் நடத்தப்பட்ட கூட்டத்தின் முடிவில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. வீரர்களின் உடல்நலத்தில் அக்கறை கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.