ஒருகாலத்தில் தோனியின் தேவை என்பது மிகவும் சராசரியாக இருந்துள்ளது. தோனி எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ விரும்பினார் என்பதை இந்திய முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் வெளிப்படுத்தியுள்ளார்.
சமூகவலைத்தளத்தில் ரசிகர் ஒருவர், தோனியுடனான அனுபவம் குறித்து கேட்டதற்கு வாசிம் ஜாஃபர் கூறியதாவது:
இந்திய அணியுடனான அவருடைய முதல் இரு வருடங்களில் அவர் இவ்வாறு சொன்னார். கிரிக்கெட் விளையாடி ரூ. 30 லட்சம் சம்பாதித்து, ராஞ்சியில் வாழ்நாள் முழுக்க நிம்மதியாக இருக்க விரும்புகிறேன் என்று தோனி சொன்னதாக ரசிகருக்குப் பதில் அளித்துள்ளார் வாசிம் ஜாஃபர்.
தோனி இதுவரை 90 டெஸ்டுகள், 350 ஒருநாள், 98 டி20 ஆட்டங்களில் இந்தியாவுக்காக விளையாடியுள்ளார். இந்திய அணிக்குத் தலைமை வகித்து 2007 டி20 உலகக் கோப்பை, 2011 உலகக் கோப்பைப் போட்டிகளை வென்றுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.