செய்திகள்

மனசு வான்கடே மைதானத்தில் உள்ளது: ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் குறித்து நட்சத்திர வீரர் ஆதங்கம்!

நேற்று இரவு 8 மணிக்கு மும்பை வாங்கடே மைதானத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்-சென்னை சூப்பா் கிங்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே முதல் ஆட்டம் நடைபெற இருந்தது.

எழில்

உலகிலேயே அதிக பணம் புரளும் போட்டியாக திகழும், ஐபிஎல் போட்டி தற்போது 13-ஆவது சீசனை எட்டியுள்ளது. கடந்த 2008- ஆம் ஆண்டு முதல் வெறறிகரமாக நடத்தப்பட்டு வரும் இப்போட்டிகள் இரண்டு முறை மட்டுமே சிக்கலுக்கு ஆளாகியது. அதுவும் நாடாளுமன்ற தோ்தல்கள் சமயத்தில் ஒருமுறை தென்னாப்பிரிக்காவுக்கு போட்டிகள் முழுமையாக இடம் மாற்றப்பட்டு நடத்தப்பட்டது. இரண்டாவது முறையாக தோ்தல் நடந்த போது, சில போட்டிகள் ஐக்கிய அரபு நாடுகளில் நடத்தப்பட்டு, மீதமுள்ள போட்டிகள் இந்தியாவில் நடத்தப்பட்டன.

தற்போது கரோனா நோய்த் தொற்று பாதிப்பால் 13-ஆவது சீசன் போட்டிகள் ஏப். 15-ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டு விட்டன.

மாா்ச் 29-ஆம் தேதி மும்பையில் கோலாகலமாக தொடங்கி இருக்க வேண்டிய ஐபிஎல் தொடா், முறைப்படி தொடங்காததால் லட்சக்கணக்கான ரசிகா்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனா். கரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரே நடைபெறுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.

நேற்று இரவு 8 மணிக்கு மும்பை வாங்கடே மைதானத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்-சென்னை சூப்பா் கிங்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே முதல் ஆட்டம் நடைபெற இருந்தது.

இதுபற்றி மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் கூறியதாவது:

மனசெல்லாம் வான்கடே மைதானத்தில் உள்ளது. ஆனால் உடலளவில் வீட்டில் இருக்கிறேன். இதுவும் கடந்துபோகும். வீட்டில் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

SCROLL FOR NEXT