முகப்பு
செய்திகள்

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஒத்திவைப்பு

கரோனா அச்சுறுத்தல் காரணமாக மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

செய்திகள்

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஒத்திவைப்பு

கரோனா அச்சுறுத்தல் காரணமாக மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:37 PM
பகிர்:

கரோனா அச்சுறுத்தல் காரணமாக மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் ஜூலை 3 முதல் 19 வரை மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை தகுதிச்சுற்று ஆட்டங்கள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டன. இதிலிருந்து 3 அணிகள் 2021-ல் நியூசிலாந்தில் நடைபெறும் உலகக் கோப்பைப் போட்டிக்குத் தகுதி பெறும்.

2021 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டி, 2021 பிப்ரவரி 6 முதல் மார்ச் 7 வரை நியூஸிலாந்தில் நடைபெறவுள்ளது. கடந்த வருடம் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் அரசியல் காரணங்களால் நடைபெறவில்லை. இதனால் இரு அணிகளுக்கும் புள்ளிகளைப் பகிர்ந்தளித்துள்ளது ஐசிசி. இதன்மூலமாக இந்திய மகளிர் அணி ஒருநாள் உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றுள்ளது. இதற்கு முன்பு ஆஸ்திரேலியா (37), இங்கிலாந்து (29) மற்றும் தென் ஆப்பிரிக்கா (25) ஆகிய அணிகள் தகுதி பெற்றன. ஐந்தாவது அணியாக இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. 17 புள்ளிகளுடன் உள்ள நியூஸிலாந்து அணி, போட்டியை நடத்தும் நாடு என்பதன் அடிப்படையில் ஏற்கெனவே தகுதி பெற்றுள்ளது. இந்த ஐந்து அணிகளோடு மீதமுள்ள 3 அணிகள் தகுதிச்சுற்றின் அடிப்படையில் தேர்வாகவுள்ளன.

இந்நிலையில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை தகுதிச்சுற்று ஆட்டங்களை ஐசிசி ஒத்திவைத்துள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →