செய்திகள்

இந்தியாவுக்கு எதிரான பகலிரவு டெஸ்ட்: மிட்செல் ஸ்டார்க் ஆர்வம்

DIN

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணி பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தில் விளையாட வேண்டும் என ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நான்கு டெஸ்டுகள், மூன்று ஒருநாள் ஆட்டங்களை டிசம்பர், ஜனவரியில் விளையாடவுள்ளது இந்திய அணி. கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தத் தொடர்கள் நடைபெறாமல் போனால் கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்புக்கு ரூ. 1,480 கோடி (196 மில்லியன் டாலர்) நஷ்டம் ஏற்படும்.

கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பு, ஆஸ்திரேலிய அரசிடம் தொடர்ந்து இதுகுறித்து விவாதித்து வருகிறது. இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்யவிருந்தால் பின்பற்றவேண்டிய நடைமுறைகளும் விவாதிக்கப்பட்டு வருகின்றன. இந்த வருட இறுதியில் ஆஸ்திரேலியாவில் விளையாட்டுப் போட்டிகள் மீண்டும் தொடங்கும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரிச்சர்ட் கோல்பெக் பேசியது, கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இத்தொடர் குறித்து ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் கூறியதாவது:

இந்தியாவுக்கு எதிராக பகலிரவு டெஸ்ட் ஆட்டம் நடைபெற்றால் அது அருமையாக இருக்கும். ரசிகர்கள் இதை மிகவும் விரும்புவார்கள். பந்துக்கும் பேட்டுக்கும் இடையே கடுமையான போட்டி நடக்கும். ஏற்கெனவே இந்திய அணி, கொல்கத்தாவில் பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தில் விளையாடியுள்ளதால் அவர்களுக்கும் இது புதிதாக இருக்காது.

ஆஸ்திரேலியாவில் நடைபெறுவதால் பகலிரவு ஆட்டம் எங்களுக்குச் சாதகமாக இருக்கும். அதேபோல இந்தியாவில் நாங்கள் விளையாடினால் அவர்களுக்குப் பகலிரவு ஆட்டம் சாதகமாக இருக்கும். பகலிரவு டெஸ்டில் விளையாட இந்திய அணியும் ஆர்வமாக இருப்பதால் அது ஆட்டத்துக்கு நல்ல சவாலை அளிக்கும் என்று கூறியுள்ளார்.   

2018-2019-ல் ஆஸ்திரேலிய மண்ணில் முதல்முறையாக வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் தொடர் வெற்றியை அடைந்தது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி. 2-1 என டெஸ்ட் தொடரை வென்றது. தொடர் நாயகன் விருது புஜாராவுக்குக் கிடைத்தது. இந்த வருட இறுதியில் ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணி 4 டெஸ்டுகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்கா யார் பக்கம்?

இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6 - 6.5% தான், 8 - 8.5% அல்ல! -ரகுராம் ராஜன்

7 நக்சல்கள் சுட்டுக் கொலை!

சுடுமணலில் பொன்மகள்!

கடந்த 24 மணி நேரத்தில் காஸாவில் பலியானவர்கள்?

SCROLL FOR NEXT