முகப்பு
செய்திகள்

கேகேஆர் அணியின் கேப்டனாக ஷுப்மன் கில்லை நியமிக்க வேண்டும்: ஆகாஷ் சோப்ரா

இம்மூவரையும் தக்கவைத்துக் கொண்டு ஷுப்மன் கில்லை கேப்டனாக்க வேண்டும்...

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:57 PM
பகிர்:

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் கேப்டனாக ஷுப்மன் கில்லை நியமிக்க வேண்டும் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி 14 ஆட்டங்களில் 7-ல் வெற்றி பெற்று 14 புள்ளிகள் பெற்றது. புள்ளிகள் பட்டியலில் 5-ம் இடம்பெற்று பிளேஆஃப்புக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. 

பேட்டிங்கில் கவனம் செலுத்துவதற்காக கேகேஆர் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகினார் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக். இதையடுத்து அணியின் துணை கேப்டனான இயன் மார்கன், கேப்டனாகத் தேர்வானார். கடந்த வருடம் நடைபெற்ற உலகக்கோப்பைப் போட்டியில் மார்கன் தலைமையில் இங்கிலாந்து அணி கோப்பையை வென்றது.

தினேஷ் கார்த்திக் தலைமையில் 7 ஆட்டங்களில் 4 வெற்றிகளைப் பெற்ற கொல்கத்தா அணி, மார்கன் தலைமையில் 7 ஆட்டங்களில் 3 வெற்றிகளைப் பெற்றது. 

இந்நிலையில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் கேப்டனாக ஷுப்மன் கில்லை நியமிக்க வேண்டும் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். இதுபற்றி அவர் தெரிவித்ததாவது:

கேகேஆர் அணி நிறைய வீரர்களைத் தக்கவைத்துக்கொள்ளக் கூடாது. என்னைக் கேட்டால் மூன்று வீரர்களைத் தான் தேர்வு செய்வேன். ஷுப்மன் கில், ரஸ்ஸல், வருண் சக்ரவர்த்தி. இம்மூவரையும் தக்கவைத்துக் கொண்டு ஷுப்மன் கில்லை கேப்டனாக்க வேண்டும். வருங்காலத்தை எண்ணி இதைக் கூறுகிறேன். ஷ்ரேயஸ் ஐயரை தில்லி கேப்டனாக்கியது போல கேகேஆர் அணியும் ஷுப்மன் கில்லை நல்ல எதிர்காலத்துக்காக கேப்டன் ஆக்க வேண்டும் என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →