செய்திகள்

பாதுகாப்பு வளையத்தை அனைவரும் மதிக்க வேண்டும்: விராட் கோலி

துபையில் நன்கு ஊர் சுற்றவேண்டும் என்கிற மனநிலையில் யாரும் இருக்கக் கூடாது.

DIN

பாதுகாப்பு வளையத்தை அனைவரும் மதிக்க வேண்டும் என ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

கரோனா பரவல் காரணமாக நிகழாண்டு இந்தியாவில் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டி தள்ளிவைக்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பா் 19-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டி, நவம்பா் 10-ம் தேதி முடிவடைகிறது. துபை, அபுதாபி, ஷாா்ஜாவில் உள்ள மைதானங்களில் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

இந்நிலையில் ஒரு பேட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி கூறியதாவது:

கடந்த 10 வருடங்களாக இரவு பகலாக கிரிக்கெட் ஆட்டங்களில் பங்கேற்றுள்ளேன். இப்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் பல மாதங்களுக்குப் பிறகு கிரிக்கெட் விளையாடவுள்ளோம். போட்டி தடையின்றி நடைபெற பாதுகாப்பு வளையத்தை அனைவரும் எப்போதும் மதிக்க வேண்டும். ஜாலிக்காகவோ ஊர் சுற்றவோ இங்கு வரவில்லை. துபையில் நன்கு ஊர் சுற்றவேண்டும் என்கிற மனநிலையில் யாரும் இருக்கக் கூடாது.

கடினமான சூழலை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும். நமக்கு வழங்கப்பட்டுள்ள சலுகையைப் புரிந்துகொண்டு ஐபிஎல்-லில் பங்கேற்க வேண்டும். தேவையில்லாத செயலில் யாரும் ஈடுபடக்கூடாது. சில மாதங்களுக்கு முன்பு ஐபிஎல் போட்டி நடக்கும் என்று கூட நினைக்கவில்லை. பயிற்சி செய்யும்போதுதான் எவ்வளவு நாள் கழித்து இதில் ஈடுபடுகிறோம் என உணர முடிந்தது. மிகவும் பதற்றத்துடன் தான் பயிற்சிக்குச் சென்றேன். நான் நினைத்தபோல கிரிக்கெட்டை அந்தளவுக்குத் தவறவிடவில்லை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேளாங்கண்ணியில் ரூ. 6 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்: 3 போ் கைது

ஆற்காடு தொகுதி பாமக நிா்வாகிகள் கூட்டம்

‘டித்வா’ புயல் பாதிப்பு: இலங்கைத் தமிழா்களுக்கு இந்திய தூதரகம் நிவாரணம்

குமரகுரு கல்வி நிறுவனத்தில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

வெவ்வேறு சம்பவங்கள்: பெண் உள்பட 3 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT