முகப்பு
செய்திகள்

ஐபிஎல்: துபைக்குப் புறப்பட்டார் செளரவ் கங்குலி

ஐபிஎல் போட்டிகளின் ஏற்பாடுகளை மேற்பார்வையிட துபைக்குப் புறப்பட்டார் செளரவ் கங்குலி

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:17 PM
பகிர்:

ஐபிஎல் போட்டிகளின் ஏற்பாடுகளை மேற்பார்வையிட துபைக்குப் புறப்பட்டார் பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி

கரோனா பரவல் காரணமாக நிகழாண்டு இந்தியாவில் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டி தள்ளிவைக்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பா் 19-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டி, நவம்பா் 10-ம் தேதி முடிவடைகிறது. துபை, அபுதாபி, ஷாா்ஜாவில் உள்ள மைதானங்களில் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. ஐபிஎல் அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. முதல் ஆட்டத்தில் சென்னை - மும்பை அணிகள் மோதுகின்றன. 

ஐபிஎல் போட்டிக்காக துபை, அபுதாபிக்குச் சென்றுள்ள அனைத்து அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளின் ஏற்பாடுகளை மேற்பார்வையிட துபைக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார் பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி. 6 மாதங்களுக்குப் பிறகு விமானத்தில் பயணம் செய்வதாக இன்ஸ்டகிராமில் தன்னுடைய துபைப் பயணம் குறித்து குறிப்பிட்டுள்ளார். 

ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் படேல் உள்ளிட்ட பிசிசிஐ அதிகாரிகள் பலரும் துபைக்கு ஏற்கெனவே சென்றுள்ளார்கள். 

முழு கட்டுரையைப் படிக்க →