செய்திகள்

பிரெஞ்சு ஓபன் போட்டியில் கலந்துகொள்ள ஃபெடரர் முடிவு

இந்த வருட பிரெஞ்சு ஓபன் போட்டியில் கலந்துகொள்ள ரோஜர் ஃபெடரர் முடிவெடுத்துள்ளார்.

DIN

இந்த வருட பிரெஞ்சு ஓபன் போட்டியில் கலந்துகொள்ள ரோஜர் ஃபெடரர் முடிவெடுத்துள்ளார்.

ஆடவர் டென்னிஸில் 20 கிராண்ட்ஸ்லாம்களுடன் முன்னணி வீரராக உள்ளார் 39 வயது ரோஜர் ஃபெடரர். கடந்த வருட ஆஸ்திரேலியன் ஓபன் போட்டியில் அரையிறுதியில் ஜோகோவிச்சிடம் ஃபெடரர் தோல்வியடைந்தார்.

காயம் காரணமாக 2020-ல் நடைபெறவுள்ள டென்னிஸ் போட்டிகளிலிருந்து விலகுவதாக ஃபெடரர் கடந்த ஜூன் மாதம் அறிவித்தார். கடந்த வருடம் அவருக்கு இரு அறுவைச் சிகிச்சைகள் நடைபெற்றன.

இந்நிலையில் இந்த வருட பிரெஞ்சு ஓபன் போட்டியில் பங்கேற்கவுள்ளதாக ஃபெடரர் அறிவித்துள்ளார். 

பிரெஞ்சு ஓபன் போட்டி, மே 30 அன்று தொடங்கவுள்ளது. 

பிரெஞ்சு ஓபன் போட்டியில் கடைசியாக 2019-ல் விளையாடிய ஃபெடரர், அரையிறுதியில் நடாலிடம் தோல்வியடைந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நஜாஃப்கா் துப்பாக்கிச்சூடு வழக்கில் மாநிலங்களுக்கு இடையேயான குற்றவாளி கைது

பகவதியம்மன் கோயில் கல் மண்டபம் சீரமைப்பு: அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க உத்தரவு

மானாமதுரை தியாக விநோதப் பெருமாள் கோயிலில் குடமுழுக்கு முகூா்த்தக்கால் நடும் விழா!

இரா. நல்லகண்ணு மறைவு: போடி, ஆண்டிபட்டியில் அமைதி ஊா்வலம்

நெடுஞ்சாலையோரங்களில் குப்பைகள் கொட்டுவதைத் தடுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT