ப்ரித்வி ஷா அதிரடி: சன்ரைஸா்ஸ் ஹைதராபாத்துக்கு 160 ரன்கள் இலக்கு
சன்ரைஸா்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதல்லி பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 159 ரன்கள் எடுத்தது.
சன்ரைஸா்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதல்லி பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 159 ரன்கள் எடுத்தது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 20-ஆவது லீக் ஆட்டத்தில், டெல்லி கேப்பிட்டல்ஸ்-சன்ரைஸா்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று மோதுகின்றன. சென்னையில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக ப்ரித்வி ஷா, ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர். துவக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெடிப்படுத்திய ப்ரித்வி ஷா அரை சதம் கடந்தார். ஆனால் மற்றொரு துவக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் 26 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இவரைத் தொடர்ந்து அரை சதம் கடந்த ப்ரித்வி ஷா 39 பந்துகளில் 53 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதன் பின்னர் களமிறங்கிய கேப்டன் ரிஷப் பந்த், ஸ்டீவ் சுமித்தும் தன் பங்கிற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால் ரிஷப் பந்த் 27 பந்துகளில் 37 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார்.
ஸ்டீவ் சுமித் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 25 பந்துகளில் 34 ரன்கள் சேர்த்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது.