செய்திகள்

நாட்டிங்காமில் மீண்டும் மழை: பிசிசிஐ

இங்கிலாந்து, இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் நடைபெறும் நாட்டிங்காமில் மீண்டும் மழை பெய்வதால் 5-ம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

DIN


இங்கிலாந்து, இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் நடைபெறும் நாட்டிங்காமில் மீண்டும் மழை பெய்வதால் 5-ம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் கடைசி நாள் ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கவிருந்தது. கடைசி நாள் ஆட்டத்தில் 9 விக்கெட்டுகள் மீதமிருக்க 157 ரன்கள் மட்டுமே தேவை என்ற வலுவான நிலையில் இந்தியா இருந்தது.

ஆனால், காலை முதல் மழை பெய்து வந்ததால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. முன்கூட்டியே உணவு இடைவேளையும் எடுக்கப்பட்டது. மழையால் ஆட்டம் பாதிக்கப்பட இந்தியாவின் வெற்றி வாய்ப்பு விகிதம் குறைந்தகொண்டே போகத் தொடங்கியது.

இந்த நிலையில் மழை நின்றுவிட்டதாக அறிவித்த பிசிசிஐ இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு நடுவர்கள் மைதானத்தில் ஆய்வு மேற்கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், மீண்டும் மழை பெய்யத் தொடங்கியதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இதனால், நடுவர்கள் மேற்கொள்ளும் ஆய்வும் தள்ளிப்போகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை மாநகராட்சி பட்ஜெட்: கல்வி, விளையாட்டுக்கு முக்கியத்துவம்! - பற்றாக்குறை ரூ.126 கோடி

போட்டித் தோ்வுக்கு 30% போ் மட்டுமே பயிற்சி பெறுகின்றனா்: ஆட்சியா்

மின்னணு பயணச் சீட்டு வழங்கும் கருவிகள் முடங்கியதால் பேருந்து பயணிகள் அவதி

பூஜையில் வைக்கப்பட்ட எலுமிச்சை ரூ.16 ஆயிரத்துக்கு ஏலம்

அமராவதி அணை நீா்ட்டம் 50 அடியாக சரிவு - கோடையில் குடிநீா் தட்டுப்பாடு அபாயம்

SCROLL FOR NEXT