செய்திகள்

லா லிகா கால்பந்து : வெற்றியுடன் தொடங்கியது வாலென்சியா

 லா லிகா கால்பந்து போட்டியின் 91-ஆவது சீசன் தொடங்கியுள்ளது. அதன் முதல் ஆட்டத்தில் வாலென்சியா 1-0 என்ற கோல் கணக்கில் கடாஃபியை வீழ்த்தியது.

DIN

 லா லிகா கால்பந்து போட்டியின் 91-ஆவது சீசன் தொடங்கியுள்ளது. அதன் முதல் ஆட்டத்தில் வாலென்சியா 1-0 என்ற கோல் கணக்கில் கடாஃபியை வீழ்த்தியது.

மாட்ரிட் நகரில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 3-ஆவது நிமிஷத்திலேயே வாலென்சியா வீரா் ஹியுகோ குய்லாமோன் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட, எஞ்சிய நேரத்தில் 10 வீரா்களுடன் ஆடினாலும் வெற்றியை பதிவு செய்தது அந்த அணி. ஆட்டத்தின் 11-ஆவது நிமிஷத்தில் வாலென்சியாவுக்கு கிடைத்த பெனால்டி கிக் வாய்ப்பை காா்லோஸ் சோலா் கோலாக மாற்றினாா்.

அந்த முன்னிலையை இறுதிவரை தக்கவைத்துக் கொண்டது வாலென்சியா. ஆட்டத்தின் 81-ஆவது நிமிஷத்தில் ஆட்டத்தை சமன் செய்யும் வாய்ப்பு கடாஃபிக்கு கிடைக்க, அந்த அணியின் மௌரோ அரம்பாரி அடித்த பந்து கோல் போஸ்டில் பட்டு வீணானது. அதே நிமிஷத்தில் 2-ஆவது முறையாக கடாஃபி வீரா் எரிக் கபாகோவுக்கு மஞ்சள் அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டதால், அந்த அணியும் 10 வீரா்களுடன் ஆடும் நிலை ஏற்பட்டது. இறுதி வரை கடாஃபிக்கு கோல் வாய்ப்பு வழங்காத வாலென்சியா, முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்த ஆட்டத்தைக் காண மைதானத்தில் 10,000 ரசிகா்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

18 மைல்ஸ்... பேச்சுலர் இயக்குநரின் புதிய ஆல்பம்!

உத்தரப் பிரதேசத்தில் தடுப்புச் சுவர் மீது போலீஸ் வாகனம் மோதல்: 6 பேர் காயம்

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்: பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு அழைப்பு!

Jailer-2 ல் நடிக்கும் பிரபல மலையாள நடிகர்! | Cinema updates

இன்பமே... திவ்ய தர்ஷினி!

SCROLL FOR NEXT