செய்திகள்

யு.எஸ். ஓபன் போட்டியிலிருந்து ஃபெடரர் விலகல்

முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்வதால் யு.எஸ். ஓபன் போட்டியிலிருந்து பிரபல வீரர் ரோஜர் ஃபெடரர் விலகியுள்ளார். 

DIN

முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்வதால் யு.எஸ். ஓபன் போட்டியிலிருந்து பிரபல வீரர் ரோஜர் ஃபெடரர் விலகியுள்ளார். 

கடைசியாக 2018 ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றார் ஃபெடரர். அதன்பிறகு அவரால் மற்றுமொரு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்ல முடியாத நிலைமையே உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற விம்பிள்டன் போட்டியில் காலிறுதியில் தோல்வியடைந்து வெளியேறியுள்ளார். 

இந்நிலையில் அறுவை சிகிச்சை மேற்கொள்வதால் யு.எஸ். ஓபன் போட்டியிலிருந்து விலகியுள்ளார் ஃபெடரர். இதுபற்றி அவர் கூறியதாவது:

விம்பிள்டனுக்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதைக் கூறுகிறேன். இது எளிதானதல்ல. விம்பிள்டனில் என்னுடைய முழங்காலை மேலும் காயமடைய செய்துவிட்டேன். அதனால் மருத்துவர்களிடம் பரிசோதனை செய்துகொண்டேன். இதைச் சரிசெய்ய அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றார்கள். நானும் இதற்கு சம்மதம் சொல்லிவிட்டேன். இதனால் பல மாதங்களுக்கு நான் விளையாட மாட்டேன். ஆரோக்கியத்துடன் இருக்க இதுவே சரியான முடிவு. இதனால் மீண்டும் பழையபடி போட்டிகளில் பங்கேற்க முடியும் என நம்புகிறேன் என்றார். இதையடுத்து யு.எஸ். ஓபன் போட்டியிலிருந்து ஃபெடரர் விலகியுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 8 அன்று 40 வயதைப் பூர்த்தி செய்தஃபெடரர், 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சீனாவின் மேலும் ஒரு பொறியியல் அதிசயம்: உலகின் உயரமான பாலம்..!

டிஜிட்டல் அரெஸ்ட்: சிக்காமல் இருக்க என்ன செய்யலாம்?

ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு போராடும்: மு.க. ஸ்டாலின்

நிரந்தர ஒளி... கேப்ரியல்லா!

உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் 3 குவாஹாட்டி பல்கைக்கழக பேராசிரியா்கள்!

SCROLL FOR NEXT