டி20 உலகக் கோப்பை: இப்போதே அணிகளைத் தேர்வு செய்வது ஏன்?
டி20 உலகக் கோப்பைக்கு இப்போதே அணிகளை அறிவிக்கவேண்டிய கட்டாயம் என்ன என்கிற கேள்வி எழலாம்.
செய்திகள்டி20 உலகக் கோப்பை: இப்போதே அணிகளைத் தேர்வு செய்வது ஏன்?
டி20 உலகக் கோப்பைக்கு இப்போதே அணிகளை அறிவிக்கவேண்டிய கட்டாயம் என்ன என்கிற கேள்வி எழலாம்.
டி20 உலகக் கோப்பை - ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. துபை, அபு தாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இந்தியாவில் நடத்தப்படவிருந்த டி20 உலகக் கோப்பை போட்டி, கரோனா சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் டி20 உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபிஞ்ச் தலைமையிலான அணியில் முக்கிய வீரர்கள் அனைவரும் இடம்பெற்றுள்ளார்கள். கடந்த வாரம் நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டது. கேன் வில்லியம்சன் தலைமையிலான அணியில் மூத்த வீரர் ராஸ் டெய்லர் நீக்கப்பட்டுள்ளார். காலின் டி கிராண்ட்ஹோம், ஃபின் ஆலன் ஆகியோருக்கும் அணியில் இடமளிக்கப்படவில்லை.
அக்டோபரில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கு இப்போதே அணிகளை அறிவிக்கவேண்டிய கட்டாயம் என்ன என்கிற கேள்வி எழலாம்.
ஐசிசி விதிமுறைகளின்படி உலகக் கோப்பை தொடங்குவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பு அணியை ஒவ்வொரு நாடும் அறிவித்து விட வேண்டும். அதன்படி செப்டம்பர் 10-ம் தேதிக்குள் அனைத்து நாடுகளும் தங்கள் அணியை அறிவிக்க வேண்டும் என்பதால் ஒவ்வொரு அணியாகத் தற்போது அறிவிக்கப்பட்டு வருகின்றன. கரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக ஐக்கிய அரபு அமீரகத்தில் தனிமைப்படுத்துதல் தொடங்குவதற்கு ஐந்து நாள்களுக்கு முன்பு வரை அறிவிக்கப்பட்ட அணியில் மாற்றம் செய்துகொள்ளலாம்.
இந்திய அணி அணி எப்போது அறிவிக்கப்படும்? இந்திய அணியின் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடர் செப்டம்பர் 14 அன்று நிறைவடைகிறது. எனவே அதுவரை பொறுமையாக இருக்க முடியாது. 4-வது டெஸ்ட், செப்டம்பர் 6 அன்று நிறைவடைவதால் அதற்குப் பிறகு அணியைத் தேர்வு செய்யக்கூடும். அல்லது 15 பேரைத் தேர்வு செய்வதில் பெரிய குழப்பங்கள் எதுவும் இல்லை என கோலியும் தேர்வுக்குழுவினரும் நினைத்தால் அதற்கு முன்பே தேர்வு செய்துவிடவும் வாய்ப்புள்ளது.