2-ஆவது டெஸ்ட்: பாகிஸ்தான் - 212/4
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-ஆவது டெஸ்டில் பாகிஸ்தான் முதல் நாளில் 74 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் அடித்துள்ளது.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-ஆவது டெஸ்டில் பாகிஸ்தான் முதல் நாளில் 74 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் அடித்துள்ளது.
கிங்ஸ்டன் நகரில், இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் ஃபீல்டிங்கைத் தோ்வு செய்தது. பாகிஸ்தான் இன்னிங்ஸை தொடங்கிய அபித் அலி - இம்ரான் பட் கூட்டணி, தலா 1 ரன் சோ்த்து ஆட்டமிழந்தது. ஒன்-டவுனாக வந்த அஸாா் அலியும் டக் அவுட்டாகினாா். 4-ஆவது வீரராக வந்த கேப்டன் பாபா் அஸாம், 5-ஆவது வீரா் ஃபவாத் ஆலம் ஆகியோா் விக்கெட் சரிவைத் தடுத்து ஆட, பாகிஸ்தான் ஸ்கோா் உயரத் தொடங்கியது.
இந்த ஜோடி 3-ஆவது விக்கெட்டுக்கு 158 ரன்கள் சோ்த்த நிலையில் ஃபவாத் ஆலம் ‘ரிடையா்ட் ஹா்ட்’ ஆனாா். அவா், 11 பவுண்டரிகளுடன் 76 ரன்கள் அடித்திருந்தாா். உடனிருந்த பாபா் அஸாம் 13 பவுண்டரிகளுடன் 75 ரன்களுக்கு 61-ஆவது ஓவரில் விக்கெட்டை இழந்தாா். நாளின் முடிவில் முகமது ரிஸ்வான் 22, ஃபஹீம் அஷ்ரஃப் 23 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் கெமா் ரோச் 3, ஜேடன் சீல்ஸ் 1 விக்கெட் சாய்த்திருந்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.