முகப்பு
செய்திகள்

கடந்த 50 இன்னிங்ஸில் சதமடிக்காமல் ஏமாற்றும் விராட் கோலி!

டெஸ்ட், ஒருநாள், டி20 எனக் கடைசியாக விளையாடிய 50 இன்னிங்ஸிலும் ஒரு சதமும் அடிக்க முடியாமல் உள்ளார் விராட் கோலி.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:59 AM
பகிர்:

விராட் கோலி களமிறங்கினாலே சதமடிப்பார் என்கிற எதிர்பார்ப்பு இப்போது மாறிவிட்டது. ஒரு சதமாவது அடித்தால் நல்லது என்கிற நிலைக்கு வந்துவிட்டார்கள் ரசிகர்கள். 

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டில் இன்று 7 ரன்களில் ஆண்டர்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்துள்ளார் கோலி. இதற்கு முந்தைய டெஸ்டுகளிலும் 0, 42, 20 என ரன்கள் எடுத்தார்.

டெஸ்ட், ஒருநாள், டி20 எனக் கடைசியாக விளையாடிய 50 இன்னிங்ஸிலும் ஒரு சதமும் அடிக்க முடியாமல் உள்ளார் விராட் கோலி. இப்படியெல்லாம் நடக்கும் என யார் எதிர்பார்த்திருக்க முடியும்?

டெஸ்டில் 27 சதங்களும் ஒருநாள் கிரிக்கெட்டில் 43 சதங்களும் எடுத்துள்ள கோலி, கடந்த ஒன்றரை வருடத்துக்கு மேலாக ஒரு சதம் கூட எடுக்க முடியாமல் இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கடைசியாக, 2019 நவம்பரில் வங்கதேசத்துக்கு எதிராக 136 ரன்கள் எடுத்தார் கோலி. அதற்குப் பிறகு விளையாடிய 50 இன்னிங்ஸிலும் அவர் ஒரு சதமும் எடுக்கவில்லை. அதற்கு முன்பு தொடர்ச்சியாக 25 இன்னிங்ஸில் தான் சதமடிக்காமல் இருந்துள்ளார். 

இதற்கு முன்பு இரு தருணங்களில் மட்டுமே நீண்டநாளாக சதமடிக்காமல் இருந்துள்ளார்.

50 இன்னிங்ஸ் - நவ. 2019 - தற்போது வரை


25 இன்னிங்ஸ் - பிப். 2014 - அக். 2014


24 இன்னிங்ஸ் - பிப். 2011 0 செப். 2011

ஒருநாள் கிரிக்கெட்டில் கடைசியாக ஆகஸ்ட் 2019-ல் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராகத் தொடர்ச்சியாக இரு சதங்கள் அடித்தார். யார் கண் பட்டதோ, இன்றுவரை மற்றொரு சதத்தைக் காண முடியவில்லை. (டி20யில் ஒரு சதமும் அடித்ததில்லை.)

முழு கட்டுரையைப் படிக்க →