முகப்பு
செய்திகள்

2 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியா: இங்கிலாந்து உணவு இடைவேளையில் 182/2

இங்கிலாந்து அணி 68 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்து 104 ரன்களுடன் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:00 AM
பகிர்:

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி 2-ம் நாள் மதிய உணவு இடைவேளையின்போது 2 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்துள்ளது.

லீட்ஸ் டெஸ்டின் முதல் நாளில் இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தியது. இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 78 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியாவின் பேட்டிங் வரிசையை இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளா்கள் ஜேம்ஸ் ஆண்டா்சன், கிரெய்க் ஓவா்டன் ஆகியோா் முற்றிலுமாக சரித்தனா். ரோஹித், ரஹானே மட்டும் இரட்டை இலக்க ரன்கள் எடுக்க, 6 போ் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனா். 3 போ் டக் அவுட்டாகினா். ஆண்டர்சனும் ஓவர்டனும் தலா 3 விக்கெட்டுகளையும் ஆலி ராபின்சன், சாம் கரண் தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்தார்கள். முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 42 ஓவர்களில் 120 ரன்கள் எடுத்தது. பர்ன்ஸ் 52, ஹசீப் ஹமீது 60 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். இங்கிலாந்து அணி, 42 ரன்கள் முன்னிலையில் இருந்தது.

இன்றும் இங்கிலாந்து தொடக்க வீரர்கள் இந்தியப் பந்துவீச்சை நன்கு சமாளித்தார்கள். நிதானமாக விளையாடி வந்த பர்ன்ஸை 61 ரன்களில் போல்ட் செய்தார் ஷமி. இதன்பிறகு வந்த மலானும் நன்கு விளையாடினார். இன்று ரன்கள் எடுக்கத் தடுமாறிய ஹமீது, 68 ரன்களில் ஜடேஜாவின் பந்தில் போல்ட் ஆனார். 

இங்கிலாந்து அணி 68 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்து 104 ரன்களுடன் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. மலான் 27, ஜோ ரூட் 14 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.