முகப்பு
செய்திகள்

முதல் நாளில் இந்தியாவை துவம்சம் செய்த இங்கிலாந்து: ஹைலைட்ஸ் விடியோ

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி முதல் நாளில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:00 AM
பகிர்:

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி முதல் நாளில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது. 

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 78 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியாவின் பேட்டிங் வரிசையை இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளா்கள் ஜேம்ஸ் ஆண்டா்சன், கிரெய்க் ஓவா்டன் ஆகியோா் முற்றிலுமாக சரித்தனா். ரோஹித், ரஹானே மட்டும் இரட்டை இலக்க ரன்கள் எடுக்க, 6 போ் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனா். 3 போ் டக் அவுட்டாகினா். ஆண்டர்சனும் ஓவர்டனும் தலா 3 விக்கெட்டுகளையும் ஆலி ராபின்சன், சாம் கரண் தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்தார்கள். 

முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 42 ஓவர்களில் 120 ரன்கள் எடுத்துள்ளது. பர்ன்ஸ் 52, ஹசீப் ஹமீது 60 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்கள். இங்கிலாந்து அணி, 42 ரன்கள் முன்னிலையில் உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.