படம்: ஆர்சிபி | இன்ஸ்டா 
செய்திகள்

துபை புறப்பட்டது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் ஆட்டங்களில் பங்கேற்க ஞாயிற்றுக்கிழமை துபை புறப்பட்டது.

DIN


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் ஆட்டங்களில் பங்கேற்க ஞாயிற்றுக்கிழமை துபை புறப்பட்டது.

இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் 2021 கரோனா பெருந்தொற்று காரணமாக பாதியிலேயே தற்காலிகமாக தடை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, மீதமுள்ள ஆட்டங்கள் செப்ம்டபர் 19-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது.

இதில் பங்கேற்பதற்கான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஞாயிற்றுக்கிழமை துபை புறப்பட்டது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவைச் சேர்ந்த இந்திய வீரர்கள் மற்றும் உதவிப் பணியாளர்கள் ஆகஸ்ட் 21 முதல் பெங்களூருவில் தனிமையில் இருந்தனர். துபையில் இறங்கியவுடன் 6 நாள்களுக்கு மீண்டும் தனிமைப்படுத்தப்படவுள்ளனர். இதன்பிறகே, அந்த அணி பயிற்சியைத் தொடங்க முடியும்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது முதல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை செப்டம்பர் 20-ம் தேதி அபுதாபியில் எதிர்கொள்கிறது. புள்ளிகள் பட்டியலில் 5 வெற்றிகள், 2 தோல்விகளுடன் பெங்களூரு அணி தற்போது 3-வது இடத்தில் உள்ளது.

ஆடம் ஸாம்பா, கேன் ரிச்சர்ட்சன், பின் ஆலென் மற்றும் ஸ்காட் குக்லெயின் ஆகியோர் மீதமுள்ள ஆட்டங்களில் விளையாடாததால் அவர்களுக்குப் பதில் இலங்கையின் வனிந்து ஹசரங்கா, துஷ்மந்தா சமீரா, சிங்கப்பூரின் டிம் டேவிட் மற்றும் இங்கிலாந்தின் ஜார்ஜ் கார்டன் ஆகியோர் மாற்று வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராஜஸ்தான் மண்பாண்டங்களை வாங்க மக்கள் ஆா்வம்!

பிலிப்பின்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

கடலில் மூழ்கி உயிரிழந்த மூவா் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்: முதல்வா் அறிவிப்பு

இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

தவெக நிா்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு: 5 போ் கைது

SCROLL FOR NEXT