செய்திகள்

இந்திய அணியிலிருந்து பாண்டியா நீக்கப்பட்டது ஏன்?: கங்குலி பதில்

இந்திய டி20 அணியிலிருந்து ஹார்திக் பாண்டியா நீக்கப்பட்டது குறித்து பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி பதில் அளித்துள்ளார்.

DIN

இந்திய டி20 அணியிலிருந்து ஹார்திக் பாண்டியா நீக்கப்பட்டது குறித்து பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி பதில் அளித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் ஹார்திக் பாண்டியா, நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து நீக்கப்பட்டார். 

ஐபிஎல் 2021 போட்டியில் மும்பை அணியில் விளையாடிய பாண்டியா, காயம் காரணமாக ஒரு ஓவர் கூட வீசவில்லை. டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராகப் பந்து வீசாததால் விமர்சனங்களுக்கு ஆளானார். பிறகு நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் பந்துவீசினாலும் ஒரு விக்கெட்டும் அவர் எடுக்கவில்லை. 

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்தபோது தோள்பட்டையில் பாண்டியாவுக்குக் காயம் ஏற்பட்டது. இதனால் உடற்தகுதி காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பாண்டியா இடம்பெறவில்லை எனக் கூறப்படுகிறது. எனினும் தேர்வுக்குழுவினர் தரப்பில் இதுபற்றி ஒரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை. 

இந்நிலையில் பாண்டியா, டி20 அணியிலிருந்து நீக்கப்பட்டது பற்றி பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்ததாவது:

பாண்டியா, நல்ல கிரிக்கெட் வீரர். காயம் காரணமாக நல்ல உடற்தகுதியில் இல்லை. அதனால் தான் இந்திய அணியில் அவர் இடம்பெறவில்லை. பாண்டியா இளம் வீரர். காயத்திலிருந்து மீண்டு வந்த பிறகு இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிப்பார் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக கூட்டணி பலப்படுத்தப்பட்டுள்ளது; கலகலத்துப் போனது அதிமுக: வைகோ

சிவகங்கை அருகே களைகட்டிய மாட்டு வண்டி பந்தயம்!

என்டிஏ கூட்டணி ஏன் இங்கு வரவே கூடாது என சொல்கிறேன் தெரிகிறதா? இதுதான் ரம்ஜான் பரிசா? - ஸ்டாலின்

டாக்ஸிக் டீசர் தேதி அறிவிப்பு!

10 ஆண்டுகளுக்குப் பின் பழம் நழுவி பாலில் விழுந்தது! திமுக கூட்டணியில் தேமுதிக!!

SCROLL FOR NEXT