அர்ஷ்தீப் சிங் 
செய்திகள்

ஐபிஎல் அணிகள் தக்கவைத்த புதிய வீரர்கள்

பல பிரபல வீரர்கள் தக்கவைக்கப்படாத நிலையில் இதுவரை இந்திய அணிக்கு விளையாடாத 4 வீரர்கள் தக்கவைக்கப்பட்டுள்ளார்கள்.

DIN

ஐபிஎல் அணிகளில் பல பிரபல வீரர்கள் தக்கவைக்கப்படாத நிலையில் இதுவரை இந்திய அணிக்கு விளையாடாத 4 வீரர்கள் தக்கவைக்கப்பட்டுள்ளார்கள்.

ஐபிஎல் போட்டியில் எதிா்வரும் பருவத்துக்கான ஏலம் நெருங்கி வரும் நிலையில், அணிகள் தக்க வைத்துக் கொண்ட வீரா்களின் பட்டியல் நேற்று வெளியானது. 4 பேரை மட்டும் தக்கவைக்க வேண்டும் என்பதால் பல பிரபல வீரர்களைத் தக்கவைக்க முடியாத நிலை அணிகளுக்கு ஏற்பட்டுள்ளது. 2021 ஐபிஎல் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 2-ம் இடம் பிடித்த  டு பிளெஸ்சிஸ், பிராவோ, சுரேஷ் ரெய்னா, உத்தப்பா, தீபக் சஹார், ஷர்துல் தாக்குர், ஹேசில்வுட் ஆகிய முக்கிய வீரர்களை சிஎஸ்கே அணியால் தக்கவைக்க முடியவில்லை. இதே நிலை தான் இதர அணிகளுக்கும். இதில் சில வீரர்கள் ஏலத்தில் பங்குபெற விருப்பம் தெரிவித்ததாலும் இந்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுவரை இந்திய அணிக்கு விளையாடாத 4 வீரர்கள் தக்கவைக்கப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் அணியைச் சேர்ந்த அர்ஷ்தீப் சிங் ரூ. 4 கோடிக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியைச் சேர்ந்த அப்துல் சமத் ரூ. 4 கோடிக்கும் உம்ரான் மாலிக் ரூ. 4 கோடிக்கும் ராஜஸ்தான் அணியைச் சேர்ந்த ஜெயிஸ்வால் ரூ. 4 கோடிக்கும் தக்கவைக்கப்பட்டுள்ளார்கள். இந்திய அணியில் விளையாடாத வீரர்களின் சம்பளம் ரூ. 4 கோடி என பிசிசிஐ அறிவித்திருப்பதால் அந்தத் தொகை தான் அவர்களுக்குக் கிடைக்கும். 

மேலும் இந்திய அணிக்காக சில ஆட்டங்களில் விளையாடிய புதிய வீரர்களான ருதுராஜ் (சென்னை), சிராஜ் (பெங்களூர்), வருண் சக்ரவர்த்தி, வெங்கடேஷ் ஐயர் (கொல்கத்தா) ஆகிய வீரர்களும் தக்கவைக்கப்பட்டுள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்காசி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மரக்கன்றுகள் நடவு!

ரூ.273 கோடி வங்கிக் கடன் மோசடி வழக்கு: தில்லி, ம.பி.யில் அமலாக்கத் துறை சோதனை

தெரு நாய்களை கட்டுப்படுத்த வலியுறுத்தி அதிமுக, பாஜக மனு

ஆத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் அனைத்துக் கட்சி பிரமுகா்கள் கூட்டம்!

டிடிஇஏ பள்ளியில் இணைய பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT