செய்திகள்

மும்பை டெஸ்ட்: மூன்று மாற்றங்களுடன் இந்திய அணி முதலில் பேட்டிங்

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. 

DIN


நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. 

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் மும்பையில் இன்று தொடங்கியுள்ளது. மழை காரணமாக ஆட்டம் மதியம் 12 மணிக்குத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டாஸ் நிகழ்வு 11.30 மணிக்கு நடைபெற்றது. 

காயம் காரணமாக ரஹானே, இஷாந்த் சர்மா, ஜடேஜா என முதல் டெஸ்டில் விளையாடிய மூன்று வீரர்கள் மும்பை டெஸ்டில் இருந்து விலகியுள்ளதாக பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. அவர்களுக்குப் பதிலாக விராட் கோலி, சிராஜ், ஜெயந்த் யாதவ் ஆகியோர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்கள். காயம் காரணமாக நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனும் மும்பை டெஸ்டில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக டாம் லேதம் கேப்டனாகச் செயல்படவுள்ளார். நியூசி. அணியில் மிட்செல் இடம்பெற்றுள்ளார். 

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். இன்று 78 ஓவர்கள் வீசப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை

மேட்டூரில் 36,533 வாக்காளா்கள் நீக்கம்

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT