செய்திகள்

இந்தியா தொடர்: சொந்தக் காரணங்களுக்காக ஓரிரு டெஸ்டுகளைத் தவறவிடும் டி காக்

இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. 

DIN

இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர் டிசம்பர் 26 அன்றும் ஒருநாள் தொடர் ஜனவரி 19 அன்றும் தொடங்குகின்றன. ஒருநாள் தொடருக்கு கேப்டனாகவும் டெஸ்ட் தொடருக்கு துணை கேப்டனாகவும் ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். 

தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் மும்பையில் மூன்று நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். டிசம்பர் 16 அன்று மும்பையிலிருந்து தனி விமானம் மூலமாகத் தென்னாப்பிரிக்காவுக்குச் செல்கிறது.  

இந்நிலையில் சொந்தக் காரணங்களுக்காக தென்னாப்பிரிக்காவின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் டி காக், இந்தியாவுக்கு எதிரான ஓரிரு டெஸ்டுகளைத் தவறவிடவுள்ளார்.  டி காக்கின் மனைவிக்கு ஜனவரி மாதம் முதல் குழந்தை பிறக்கவுள்ளது. இதனால் 2-வது மற்றும் 3-வது டெஸ்டுகளில் இருந்து டி காக் விலகவுள்ளார். தென்னாப்பிரிக்க அணியின் தேர்வுக்குழு உறுப்பினர் விக்டர் இத்தகவலை உறுதிபடுத்தியுள்ளார். குறைந்தபட்சம் 3-வது டெஸ்டை டி காக் தவறவிட வாய்ப்புள்ளது. ஒருவேளை 2-வது டெஸ்டுக்கு முன்பு கரோனா பாதுகாப்பு வளையத்தை விட்டு டி காக் வெளியேறினால் பாதுகாப்பு காரணங்களால் அவரால் 3-வது டெஸ்டிலும் பங்கேற்காத நிலைமை ஏற்படும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோட்டை 7 முக்தி அளிக்கும் சக்தி பீடங்கள்...!

சென்னிமலை முருகனுக்கு பாலாபிஷேக பெரு விழா

அதிக லாபத்துடன் இயங்கும் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை

ஒகேனக்கல்லில் ஆடிப் பெருக்கு விழா: ரூ. 1.07 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி அமைச்சா் வழங்கினாா்

‘எண்ணும் எழுத்தும்’ திட்டம்: கண்காணிப்பு அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT