முகமது வாசிம் (இடது) 
செய்திகள்

டி20: மே.இ. தீவுகள் அணியை எளிதாக வென்ற பாகிஸ்தான்

மேற்கிந்தியத் தீவுகள் அணி, பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது.

DIN

மேற்கிந்தியத் தீவுகள் அணி, பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. அனைத்து ஆட்டங்களும் கராச்சியில் நடைபெறுகின்றன.

முதல் டி20 ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் குவித்தது. ரிஸ்வான் 78 ரன்களும் ஹைதர் அலி 68 ரன்களும் எடுத்தார்கள். பிறகு பேட்டிங் செய்த மே.இ. தீவுகள் அணி மோசமாக விளையாடி 19 ஓவர்களில் 137 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. முகமது வாசிம் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆட்ட நாயகன் விருது ஹைதர் அலிக்கு வழங்கப்பட்டது.

2-வது டி20 ஆட்டம் இன்று நடைபெறுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

அமித் ஷா-வை சந்திக்கக் காரணம்…: EPS விளக்கம்! | செய்திகள்: சில வரிகளில் | 17.09.25

ஜெர்மனியில் செந்தேன்... சிவாங்கி!

நட்புக்குள்ளே.... சத்யா தேவராஜன்!

பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் அளித்த பிறந்தநாள் பரிசு! என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT