செய்திகள்

பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஓய்வு அறிவிப்பு

இங்கிலாந்து முன்னாள் வீரர் டேவிட் லாயிட், கிரிக்கெட் வர்ணனையிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

DIN

இங்கிலாந்து முன்னாள் வீரர் டேவிட் லாயிட், கிரிக்கெட் வர்ணனையிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

74 வயது லாயிட், இங்கிலாந்து அணிக்காக 9 டெஸ்டுகள், 8 ஒருநாள் ஆட்டங்களிலும் 407 முதல்தர ஆட்டங்களிலும் விளையாடியுள்ளார். இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார்.

ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் கிரிக்கெட் வர்ணையாளராக 22 வருடங்கள் பணியாற்றியுள்ள டேவிட் லாயிட், தன்னுடைய அற்புதமான வர்ணனையால் ஏராளமான ரசிகர்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில் வர்ணனையாளர் பொறுப்பிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

பாப் வில்லிஸ் மறைவுக்குப் பிறகும் தன்னுடைய நண்பர்கள் டேவிட் கோவர், இயன் போத்தம், மைக்கேல் ஹோல்டிங் ஆகியோர் வர்ணனையிலிருந்து ஓய்வு பெற்றதாலும் வர்ணனைக் குழு அறையில் சற்று வெறுமையை உணர்வதாகவும் ஆகவே தானும் அவர்களைப் போல ஓய்வு பெற எண்ணியதாகவும் டேவிட் லாயிட் கூறியுள்ளார். ஸ்கை கிரிக்கெட் வர்ணனையாளர் குழுவில் மைக்கேல் ஆர்தர்டன், நாசிர் ஹுசைன், இயன் வார்ட், ராப் கீ போன்றோர் சிறப்பாகப் பணியாற்றுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

SCROLL FOR NEXT