செய்திகள்

பும்ராவின் காயம் குணமாகிவிட்டதா?: முகமது ஷமி பதில்

DIN

முதல் டெஸ்டில் ஏற்பட்ட காயத்திலிருந்து பும்ரா குணமாகி விட்டதாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷமி கூறியுள்ளார்.

இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட், செஞ்சுரியனில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 105 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் எடுத்தது. ராகுல் 123, மயங்க் அகர்வால் 60, ரஹானே 48 ரன்கள் எடுத்தார்கள். தெ.ஆ. தரப்பில் என்கிடி 6 விக்கெட்டுகளும் ரபாடா 3 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். 

இந்திய அணி சிறப்பாகப் பந்துவீசியதால் தெ.ஆ. அணி முதல் இன்னிங்ஸில் 62.3 ஓவர்களில் 197 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பவுமா 52 ரன்கள் எடுத்தார். இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷமி 5 விக்கெட்டுகளும் பும்ரா, தாக்குர் தலா 2 விக்கெட்டுகளும் சிராஜ் 1 விக்கெட்டும் எடுத்தார்கள். 3-ம் நாள் முடிவில் இந்திய அணி 6 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 16 ரன்கள் எடுத்துள்ளது. ராகுல் 5, தாக்குர் 4 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். இந்திய அணி 9 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 146 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 

இந்த ஆட்டத்தின் மூலம் 200-வது டெஸ்ட் விக்கெட்டை எடுத்தார் ஷமி. இந்த இலக்கை எட்டிய 5-வது இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்கிற பெருமையைப் பெற்றார்.

பும்ரா தனது 6-வது ஓவரை வீசியபோது அவருக்குக் காயம் ஏற்பட்டது. பந்துவீசி முடிக்கும்போது கால் இடறியதால் கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக ஓய்வறைக்குச் சென்று சிகிச்சை மேற்கொண்டார். காயத்திலிருந்து மீண்ட பும்ரா மீண்டும் மைதானத்துக்குள் வந்தார். பிறகு வழக்கம்போல பந்துவீசி கடைசி விக்கெட்டையும் எடுத்தார்.

இந்நிலையில் பும்ராவின் காயம் குறித்து முகமது ஷமி கூறியதாவது:

பும்ராவுக்குக் காயம் பெரிதாக ஏற்படவில்லை. மீண்டும் வந்து அவர் பந்துவீசினார். உங்கள் குழுவில் ஒருவர் இல்லையென்றால் அழுத்தம் ஏற்படும். முக்கியமாக, டெஸ்ட் ஆட்டங்களில் நீண்ட நேரம் ஓவர்கள் வீசவேண்டும் என்பதால். அது நினைவில் இருந்துகொண்டே இருக்கும். ஆனால் எங்களிடம் ஐந்து பந்துவீச்சாளர்கள் உள்ளார்கள். எனவே பிரச்னை ஏற்பட்டால் சரிசெய்து விட முடியும். ஒரு குழுவாகச் சமாளித்துவிட்டோம். கூடுதல் அழுத்தம் ஏற்படவில்லை.

பும்ரா நலமாக உள்ளார். நீங்களே பார்த்தீர்கள், மீண்டும் பந்துவீச வந்து, கடைசி விக்கெட்டையும் எடுத்தார். கணுக்காலில் காயம் ஏற்பட்டால் அது வலி ஏற்படுத்தும். சீக்கிரம் குணமாகவேண்டும் என விரும்புவோம். அவர் காயத்திலிருந்து மீண்டு வந்து ஒரு மணி நேரம் ஃபீல்டிங் செய்தார். எனவே பும்ரா நன்றாக உள்ளார், ஒரு பிரச்னையும் இல்லை என நினைக்கிறேன் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT