செய்திகள்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பெயர் மாற்றம்

​கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பெயர் பஞ்சாப் கிங்ஸ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

DIN


கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பெயர் 'பஞ்சாப் கிங்ஸ்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 8 அணிகளுள் கிங்ஸ் லெவன் பஞ்சாபும் ஒன்று. 13 ஐபிஎல் சீசன்களில் ஒரு முறை இறுதி  ஆட்டம் வரை சென்றது. மற்றொரு முறை 3-வது இடத்தைப் பிடித்தது. கடந்த ஐபிஎல் சீசனின் புள்ளிகள் பட்டியலில் பஞ்சாப் அணி 6-வது இடத்தைப் பிடித்தது.

14-வது ஐபிஎல் சீசன் ஏப்ரல் 2-வது வாரம் தொடங்கவுள்ளது. இதற்கான வீரர்கள் ஏலம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

இந்த நிலையில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பெயர் 'பஞ்சாப் கிங்ஸ்' என மாற்றப்பட்டுள்ளது.

இதுபற்றி தகவலறிந்த பிசிசிஐ வட்டாரம் கூறியது:

"நீண்ட நாள்களாகப் பெயரை மாற்ற அணி நிர்வாகம் யோசித்து வருகிறது. இந்த ஐபிஎல் தொடருக்கு முன் பெயரை மாற்ற நினைத்தனர். எனவே, இது திடீர் முடிவல்ல." 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“தமிழக உரிமைகளை அடகு வைக்காத தலைவர் மு.க.ஸ்டாலின்!” திமுகவில் இணைந்த மனோஜ் தங்கராஜ் பேட்டி!

ரிலாக்ஸ்... ரேஷ்மா பசுபுலேட்டி!

விஜே பார்வதிக்கு சரியான போட்டியாளர் திவ்யா கணேசன்! ரசிகர்கள் கருத்து

தெலங்கானா அமைச்சரவையில் அசாருதீனுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு!

கோவிலுமல்ல, சிற்பமுமல்ல... ஆனியா!

SCROLL FOR NEXT