செய்திகள்

இன்று காலையில் அவரால் நிமிர்ந்து நிற்கக் கூட முடியவில்லை: அஸ்வினை மெச்சும் மனைவி ப்ரீத்தி

இன்று காலையில் எழுந்திருக்கும்போது அவரால் நிமிர்ந்து நிற்கக் கூட முடியவில்லை...

DIN

முதுகு வலியால் அவதிப்படும் அஸ்வின், சிட்னி டெஸ்டில் கடுமையாகப் போராடி டிரா செய்ததை அவருடைய மனைவி ப்ரீத்தி பாராட்டியுள்ளார். 

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றது. 

டெஸ்ட் தொடரில், முதல் டெஸ்டை 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது ஆஸ்திரேலியா. மெல்போர்னில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. 3-வது டெஸ்ட் சிட்னியில் நடைபெற்றது. 

சிட்னியில் கடந்த 7-ம் தேதி தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 338 ரன்கள் குவித்தது. அணியின் தரப்பில் ஸ்டீவ் ஸ்மித் 131 ரன்கள் விளாச, இந்திய தரப்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தினாா்.

பின்னா் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, 244 ரன்கள் எடுத்தது. ஷுப்மன் கில், சேதேஷ்வா் புஜாரா மட்டும் தலா 50 ரன்கள் அடிக்க, ஆஸ்திரேலிய அணியில் பேட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினாா்.

முதல் இன்னிங்ஸில் 94 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா 2-ஆவது இன்னிங்ஸில் 87 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் சோ்த்து டிக்ளோ் செய்தது. இந்திய அணிக்கு 407 வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 

இந்திய அணியின் கடுமையான முயற்சியால் சிட்னி டெஸ்ட் டிரா ஆகியுள்ளது. 5-வது நாளில் ரிஷப் பந்த், புஜாரா, விஹாரி, அஸ்வின் ஆகியோர் சிறப்பாக விளையாடி ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளித்துள்ளார்கள். ரோஹித் சர்மா 52, புஜாரா 77, ரிஷப் பந்த் 97, அஸ்வின் 39, விஹாரி 23 ரன்கள் எடுத்தார்கள்.

இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 131 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 334 ரன்கள் எடுத்தது. விஹாரி 161 பந்துகளில் 23 ரன்களும் அஸ்வின்  128 பந்துகளில் 39 ரன்களும் எடுத்து வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்கள். கடைசி வரை விஹாரி, அஸ்வினின் விக்கெட்டை ஆஸ்திரேலிய வீரர்களால் எடுக்க முடியாமல் போனது. இருவரும் 259 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார்கள். இதனால் சிட்னி டெஸ்ட் எதிர்பாராதவிதமாக டிரா ஆனது. கடைசி நாளில் இந்திய அணியினரின் போராட்டத்தை எந்தவொரு கிரிக்கெட் ரசிகராலும் மறக்க முடியாது.   

இந்நிலையில் அஸ்வினின் மனைவி ப்ரீத்தி, அஸ்வினின் முயற்சிக்குப் பாராட்டு தெரிவித்து ட்விட்டரில் எழுதியதாவது:

நேற்றிரவு தூங்கச் செல்லும்போது கடுமையான முதுகு வலியால் அவதிப்பட்டார். இன்று காலையில் எழுந்திருக்கும்போது அவரால் நிமிர்ந்து நிற்கக் கூட முடியவில்லை. ஷூ லேஸ்களைக் கூட கட்ட முடியாத அளவுக்குக் குனிய சிரமப்பட்டார். அஸ்வின் இன்று சாதித்ததை எண்ணி ஆச்சர்யப்படுகிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெக என்றால் திமுகவிற்கு அலர்ஜி: டிடிவி தினகரன்

தேஜஸ் விமான விபத்து: விங் கமாண்டர் உடலுக்கு அரசு மரியாதை!

குவாஹாட்டியில் இந்தியாவை புரட்டி எடுத்த தெ.ஆ. ஆல்-ரவுண்டர்கள்: 489 ரன்கள் குவிப்பு!

பெங்களூர் வங்கிப் பணம் கொள்ளை: கும்பலுக்கு பயிற்சி கொடுத்து பிளான் போட்ட காவலர்!

"விவசாயிகளை வஞ்சிக்கும் மத்திய அரசு!" தஞ்சையில் திமுவினர் ஆர்ப்பாட்டம்!

SCROLL FOR NEXT