செய்திகள்

ரஹானேவுக்கு ஹேடின் பாராட்டு

DIN

சிட்னியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்டில் மிக அற்புதமாக செயல்பட்டு போட்டியை டிராவில் முடித்த இந்திய கேப்டன் அஜிங்க்ய ரஹானேவை ஆஸ்திரேலிய முன்னாள் விக்கெட் கீப்பா் பிராட் ஹேடின் பாராட்டியுள்ளாா்.

சிட்னியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 407 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் 2-ஆவது இன்னிங்ஸை ஆடியது இந்திய அணி. ஒரு கட்டத்தில் இந்திய அணி கடுமையான நெருக்கடியில் இருந்தபோது, வழக்கமாக 6-ஆவது இடத்தில் களமிறங்கும் ரிஷப் பந்தை 5-ஆவது இடத்தில் களமிறக்கினாா் ரஹானே. அதற்கு நல்ல பலனும் கிடைத்தது.

அதிரடியாக ஆடிய ரிஷப் பந்த் 118 பந்துகளில் 97 ரன்கள் குவித்தாா். இதன்பிறகு ஹனுமா விஹாரி-அஸ்வின் ஜோடியின் அபார ஆட்டத்தால் இந்திய அணி தோல்வியிலிருந்து மீண்டதோடு, போட்டியையும் டிரா செய்தது. இந்திய அணி டிரா செய்ததற்கு கேப்டன் ரஹானேவின் சாதுா்யமான முடிவெடுக்கும் திறனே காரணம் என அனைவரும் பாராட்டி வருகின்றனா்.

இந்த நிலையில், பிராட் ஹேடின் மேலும் கூறியிருப்பதாவது: ரிஷப் பந்தை முன்வரிசையில் களமிறக்குவது என ரஹானே முடிவெடுத்தது மிக அற்புதமான விஷயமாகும். ரஹானேவின் இந்த முடிவை கூா்ந்து கவனித்தால், அவா் ரிஷப் பந்த் மூலம் இந்தியாவை சரிவிலிருந்து மீட்க முயற்சித்தது தெரியவரும். ரஹானே நினைத்ததை ரிஷப் பந்தும் செய்து முடித்துள்ளாா்.

ரிஷப் பந்துக்கு பிறகு களமிறங்கிய ஹனுமா விஹாரி, புஜாராவை போலவே விளையாடினாா். ரஹானே ஒரு கேப்டனாக போட்டியை இழக்கவில்லை. வெற்றி இலக்கு பெரிதாக இருந்தபோதிலும், அதை எட்டுவதற்கு ரஹானே முயற்சித்துள்ளாா். இந்திய அணியின் முன்னணி வீரா்கள் பலா் காயத்தால் அவதிப்பட்டபோதிலும், மற்ற வீரா்கள் ஒன்றிணைந்து மிகச்சிறப்பாக விளையாடி தங்களின் வலிமையை நிரூபித்துள்ளனா் என குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

ஜூன் 1-ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

SCROLL FOR NEXT