செய்திகள்

காலே டெஸ்ட்: இலங்கையை 135 ரன்களுக்குச் சுருட்டிய இங்கிலாந்து அணி

DIN


இலங்கை - இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டம் இலங்கையின் காலே நகரில் இன்று தொடங்கியுள்ளது. 

இங்கிலாந்து அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரு ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி இலங்கையின் காலே நகரில் நடைபெற்று வருகிறது. இலங்கை அணியைப் பொருத்தவரையில் ஏஞ்செலோ மேத்யூஸ் காயத்திலிருந்து மீண்டு அணிக்கு திரும்பியுள்ளார். இவ்விரு அணிகளும் இதுவரை 34 டெஸ்ட் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் இங்கிலாந்து 15 வெற்றிகளையும், இலங்கை 8 வெற்றிகளையும் பெற்றுள்ளன. 11 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.

காலேவில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக மைதானத்தில் ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை.

டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி சிறப்பாகப் பந்துவீசி இலங்கை அணியை 46.1 ஓவர்களில் 135 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்துள்ளது. கேப்டன் தினேஷ் சண்டிமல் அதிகபட்சமாக 28 ரன்கள் எடுத்தார். டாம் பெஸ் 5 விக்கெட்டுகளும் பிராட் 3 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்கள். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குரல் மாதிரியை பயன்படுத்தி புதிய வகை மோசடி: மின் வாரியம் எச்சரிக்கை

ராஃபாவிலிருந்து வெளியேறுங்கள்!

நாங்குனேரி மாணவரின் உயா்கல்விக்கு துணை நிற்பேன் அமைச்சா் அன்பில் மகேஸ் உறுதி

நகைப் பறிப்பில் ஈடுபட்ட இருவா் கைது

’ரயில் பெட்டியின் ‘கோடை குளியல்’

SCROLL FOR NEXT