செய்திகள்

திட்டமிட்டபடி ஒலிம்பிக்ஸ் போட்டி!

DIN

விளையாட்டு உலகின் மிகப்பெரிய போட்டியாக கருதப்படுவது ஒலிம்பிக்ஸ் போட்டி. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இப்போட்டி 2016-ல் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்றது.

அதன்பின் 2020 டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டி ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கரோனா பாதிப்பால், போட்டிகளை ஒத்திவைக்க வேண்டும் என விளையாட்டு வீரா்கள் உள்பட பல்வேறு தரப்பினா் வலியுறுத்தினா். இதையடுத்து டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டி ஒத்திவைக்கப்பட்டது.

கரோனா வைரஸ் பரவலால் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக்ஸ் போட்டி ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரையும் பாராலிம்பிக்ஸ் போட்டிகள் ஆக. 24 முதல் செப். 5 வரையும் நடைபெறும் என ஐஓசி, போட்டி அமைப்புக் குழு உள்ளிட்டவை அறிவித்தன. 

ஒலிம்பிக்ஸ் போட்டியின் நிலைமை குறித்து சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவர் தாமஸ் பாக் கூறியதாவது:

ஒலிம்பிக் மைதானத்தில் ஜூலை 23 அன்று ஒலிம்பிக்ஸ் போட்டி தொடங்கும். இதனால் தான் மாற்று ஏற்பாட்டை நாங்கள் எடுக்கவில்லை. இந்த விளையாட்டுப் போட்டியைப் பாதுகாப்பாகவும் வெற்றிகரமாகவும் நடத்துவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

புதுமைப் பெண் திட்டம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் 10,168 மாணவிகள் பயன்

ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலை அதிகாரிகளுடன் இயக்குநா் ஆலோசனை

போ்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

விரும்பிய பாடம் கிடைக்காத விரக்தியில் மாணவா் தற்கொலை

SCROLL FOR NEXT