தினேஷ் கார்த்திக் 
செய்திகள்

சையத் முஷ்டாக் அலி டி20: தமிழக அணிக்கு 155 ரன்கள் இலக்கு!

காலிறுதிச் சுற்றில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 154 ரன்கள் எடுத்துள்ளது.

DIN

தமிழகத்துக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான காலிறுதிச் சுற்றில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 154 ரன்கள் எடுத்துள்ளது.

கரோனா சூழலில் உள்நாட்டு போட்டிகளை நடத்துவது தாமதமாகிவிட்ட நிலையில், அவற்றில் முதலாவதாக சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான போட்டி நடத்தப்படுகிறது. ஜனவரி 10 முதல் ஜனவரி 19 வரை லீக் சுற்றுகள் நடைபெற்றன. லீக் ஆட்டங்கள் பெங்களூர், சென்னை, கொல்கத்தா, வதோதரா, இந்தூர், மும்பை ஆகிய ஆறு நகரங்களில் நடைபெற்றன. 38 அணிகள் 6 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. அனைத்து அணிகளும் தலா 5 ஆட்டங்களில் விளையாடின. குரூப் பி பிரிவில் உள்ள தமிழ்நாடு அணி தனது லீக் ஆட்டங்களை கொல்கத்தாவில் விளையாடியது. 

நாக் அவுட் ஆட்டங்கள் ஆமதாபாத்தில் நடைபெறுகின்றன. அங்கும் கரோனா பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது. காலிறுதி ஆட்டங்கள் ஜனவரி 26, 27 தேதிகளில் நடைபெற்றன. இன்று அரையிறுதி ஆட்டமும் இறுதிச்சுற்று ஜனவரி 31 அன்றும் நடைபெறவுள்ளன. 

இன்று நடைபெற்று வரும் அரையிறுதிச் சுற்றில் தமிழகம் - ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் அசோக் மெனாரியா 32 பந்துகளில் 51 ரன்களும் அர்ஜித் குப்தா 45 ரன்களும் எடுத்தார்கள். தமிழக வேகப்பந்து வீச்சாளர் முகமது 4 விக்கெட்டுகளையும் சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அந்த வெள்ளைச் சிரிப்பில்... சஞ்சிதா உகாலே!

உணர்வுகளை மறைப்பதில் நான் கெட்டிக்காரியல்ல... நியதி ஃபட்னானி!

சேலையில் பெரிய சந்தோஷம்... கரீஷ்மா டன்னா!

ஈரோடு மாவட்டத்திற்கு முதல்வரின் 6 முக்கிய அறிவிப்புகள்!

இளையராஜா காப்புரிமை கொடுத்து விடுவார்: கங்கை அமரன்

SCROLL FOR NEXT