இந்திய மகளிருக்கு 220 ரன்கள் வெற்றி இலக்கு: ஆறுதல் வெற்றி பெறுமா?
இந்திய மகளிருடனான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 47 ஓவர்கள் முடிவில் 219 ரன்கள் எடுத்துள்ளது.
செய்திகள்இந்திய மகளிருக்கு 220 ரன்கள் வெற்றி இலக்கு: ஆறுதல் வெற்றி பெறுமா?
இந்திய மகளிருடனான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 47 ஓவர்கள் முடிவில் 219 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய மகளிருடனான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 47 ஓவர்கள் முடிவில் 219 ரன்கள் எடுத்துள்ளது.
இங்கிலாந்து மகளிர், இந்திய மகளிர் அணிகளுக்கிடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டம் சனிக்கிழமை நடைபெற்று வருகிறது. மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.
தாமதத்தினால் ஆட்டம் இருஅணிகளுக்கும் தலா 47 ஓவர்களாகக் குறைக்கப்பட்டன. டாஸ் வென்ற இந்திய கேப்டன் மிதாலி ராஜ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இந்திய மகளிருக்கு ஷிகா பாண்டே சிறப்பான தொடக்கத்தைத் தந்தார். இன்னிங்ஸின் 2-வது ஓவரிலேயே டேமி பியூமௌண்ட் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து, லாரென் வின்ஃபீல்ட் ஹில் மற்றும் கேப்டன் ஹீத்தர் நைட் பாட்னர்ஷிப் அமைத்தனர். இரண்டாவது விக்கெட்டுக்கு இந்த இணை 67 ரன்கள் சேர்த்த நிலையில் வின்ஃபீல்ட் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து சிறிது நேரம் கழித்து நைட் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதன்பிறகு, நடாலி சிவர் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து அதிகபட்சமாக 49 ரன்கள் எடுத்தார். மற்ற வீராங்கனைகள் பெரிதளவு சோபிக்கவில்லை.
இதனால், நிர்ணயிக்கப்பட்ட 47 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து மகளிர் அணி 219 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்திய அணித் தரப்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளையும், ஜுலான் கோஸ்வாமி, ஷிகா பாண்டே, பூனம் யாதவ், ஸ்நே ராணா, ஹர்மன்பிரீத் கௌர் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
முதலிரண்டு ஆட்டங்களில் இந்திய மகளிர் அணி தோற்ற நிலையில், இந்த ஆட்டத்தில் ஆறுதல் வெற்றி பெறுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.