செய்திகள்

ஒலிம்பிக்ஸ்: டோக்கியோவில் அவசரநிலை அறிவிப்பு

ஒலிம்பிக்ஸ் போட்டிகள் தொடங்குவதற்கு 15 நாள்களே உள்ள நிலையில் இந்த அறிவிப்பு...

DIN

ஜப்பானில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் தலைநகா் டோக்கியோவில் கரோனா பரவல் தொடா்ந்து தீவிரமடைந்து வருவதைத் தொடா்ந்து, அந்த நகரில் 40 நாள்களுக்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு உலகின் மிகப்பெரிய போட்டியாக கருதப்படுவது ஒலிம்பிக்ஸ் போட்டி. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இப்போட்டி 2016-ல் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்றது.

அதன்பின் 2020 டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டி ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கரோனா பாதிப்பால், போட்டிகளை ஒத்திவைக்க வேண்டும் என விளையாட்டு வீரா்கள் உள்பட பல்வேறு தரப்பினா் வலியுறுத்தினா். இதையடுத்து டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டி ஒத்திவைக்கப்பட்டது.

டோக்கியோவில் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 5 வரை ஒலிம்பிக்ஸ் போட்டி நடைபெறுகிறது. ஒலிம்பிக்ஸ் போட்டிகள் தொடங்குவதற்கு 15 நாள்களே உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜூலை 12 முதல் ஆகஸ்ட் 22 வரை ஜப்பான் பிரதமா் யோஷிஹைட் சுகா, 4-ம் அவசரநிலையை அறிவித்துள்ளார்.

டோக்கியோவில் கரோனா பரவலின் தீவிரம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. புதன்கிழமை மட்டும் புதிதாக 920 பேருக்கு அந்த நோய் உறுதி செய்யப்பட்டது. இது, நகரில் மே மாத மத்தியில் இருந்து நிலவும் கரோனா 4-ம் நிலையில் அதிகபட்ச தினசரி பாதிப்பாகும்.

ஜப்பானில் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் தொடங்குவதற்கு 15 நாள்களே உள்ளதால், அங்குச் சில பகுதிகளில் அறிவிக்கப்பட்டுள்ள கரோனா அவசரநிலையை முடிவுக்குக் கொண்டு வர அரசு பரிசீலித்து வந்தது. ஆனால் கரோனா பரவல் அதிகமானதால் இந்த முடிவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த அவசரநிலையின்போது உணவகங்கள், மதுபான விடுதிகளை இரவு 8 மணிக்கு மூடுதல், அத்தியாவசியமற்ற காரணங்களுக்காக மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதைத் தவிா்த்தல் போன்ற நோய்த்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் வலியுறுத்தப்படுவாா்கள். ஆனால், விதிகளை மீறுபவா்கள் தண்டிக்கப்படமாட்டாா்கள்.

பிரதமர் அறிவித்துள்ள இந்த அவசரநிலையால் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியின்போது மைதானங்களில் ரசிகர்களை அனுமதிப்பது சந்தேகம் எனத் தெரிகிறது. இதுகுறித்த முடிவு விரைவில் எடுக்கப்படவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வண்ண மானே... ஸ்வேதா!

தங்கச் சிலை... சப்தமி கௌட!

இவ்வளவு பெரிய படத்தில் இதைக் கவனிக்கவில்லையா?

"பராசக்தி" படப்பிடிப்பு நிறைவு! கொண்டாடிய படக்குழு! | SK | Sudha Kongara

ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களவைத் தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு

SCROLL FOR NEXT