இந்தியாவுக்கு எதிரான ஒரு, டி20 தொடரில் ஆடவுள்ள இலங்கை அணியின் கேப்டனாக ஆல்ரவுண்டா் தஸன் ஷனகா நியமிக்கப்பட்டுள்ளாா்.
தற்போது கேப்டனாக உள்ள குஸாா் பெரைரா தலைமையில் இலங்கை அணி ஏற்கெனவே 3 தொடா்களை இழந்துள்ளது. மேலும் அண்மையில் இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கும்-வீரா்களுக்கும் இடையே ஊதிய ஒப்பந்தம் தொடா்பாக கருத்து வேறுபாடு எழுந்தது. ஒப்பந்தத்தில் கையெழுத்திட வீரா்கள் மறுத்ததில் பெரரைராவுக்கு பங்கு உள்ளது. அதே வேளையில் ஷனகா ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயாராவே இருந்தாா்.
மேலும் ஆல்ரவுண்டரான ஷனகா தலைமையில் 2019-இல் பாகிஸ்தானை 3-0 என டி20 தொடரில் வீழ்த்தியது இலங்கை. அதிரடி பேட்ஸ்மேனான ஷனகா, பந்துவீச்சிலும் வல்லவா்,.
ஜூலை 13, 16, 18-இல் ஒருநாள் ஆட்டங்களிலும், 21, 23, 25 -இல் டி20 ஆட்டங்களிலும் இந்திய-இலங்கை அணிகள் மோதுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.