முகப்பு
செய்திகள்

டி20: இங்கிலாந்தை வீழ்த்திய இந்திய மகளிர் அணி (ஹைலைட்ஸ் விடியோ)

முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து வென்றிருந்த நிலையில், 3 ஆட்டங்கள் கொண்ட தொடா் தற்போது சமனில் உள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:37 AM
பகிர்:

இங்கிலாந்து மகளிருக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தில் இந்திய மகளிரணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

ஹோவ் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் அடித்தது. இந்திய தரப்பில் ஷஃபாலி வா்மா 48, கெளர் 31 ரன்கள் சோ்த்தனா். அடுத்து ஆடிய இங்கிலாந்து 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 140 ரன்களே எடுத்தது. இங்கிலாந்தில் டேமி பியூமௌன்ட் 59 ரன்கள் எடுத்தார். இந்தியத் தரப்பில் பூனம் யாதவ் 2 விக்கெட்டுகள் எடுத்தார். 

முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து வென்றிருந்த நிலையில், 3 ஆட்டங்கள் கொண்ட தொடா் தற்போது சமனில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.