செய்திகள்

இந்திய மகளிர் அணிக்கு அபராதம்

DIN

இங்கிலாந்து மகளிருக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தில் இந்திய மகளிரணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்த ஆட்டத்தில் குறிப்பிட்ட நேரத்தில் குறைவாக ஒரு ஓவர் வீசிய காரணத்துக்காக இந்திய அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

ஹோவ் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து ஃபீல்டிங்கைத் தோ்வு செய்தது. முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் அடித்தது. இந்திய தரப்பில் ஷஃபாலி வா்மா 48, கெளர் 31 ரன்கள் சோ்த்தனா். அடுத்து ஆடிய இங்கிலாந்து 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 140 ரன்களே எடுத்தது. இங்கிலாந்தில் டேமி பியூமௌன்ட் 59 ரன்கள் எடுத்தார். இந்தியத் தரப்பில் பூனம் யாதவ் 2 விக்கெட்டுகள் எடுத்தார். 

முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து வென்றிருந்த நிலையில், 3 ஆட்டங்கள் கொண்ட தொடா் தற்போது சமனில் உள்ளது.

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் குறிப்பிட்ட நேரத்தில் ஒரு ஓவர் குறைவாக வீசியதால் இந்திய மகளிர் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆட்ட ஊதியத்தில் 20% அபராதம் விதிக்கப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது. 

இறுதி டி20 ஆட்டம் நாளை (ஜூலை 14) நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை: நாளை(மே 20) உதகை மலை ரயில்கள் ரத்து

ஜுன் 4ம் தேதி முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது: பிரியங்கா காந்தி

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

இந்தியன் -2 முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஈரான் அதிபா் ரய்சி பயணித்த ஹெலிகாப்டா் விபத்து

SCROLL FOR NEXT