இந்திய அணியின் பயிற்சி ஆட்டம்: கே.எல். ராகுல் விக்கெட் கீப்பர்
கவுன்டி அணிக்கு எதிரான இந்திய அணியின் பயிற்சி ஆட்டத்தில் விக்கெட் கீப்பராக கே.எல். ராகுல் செயல்படவுள்ளார்.
கவுன்டி அணிக்கு எதிரான இந்திய அணியின் பயிற்சி ஆட்டத்தில் விக்கெட் கீப்பராக கே.எல். ராகுல் செயல்படவுள்ளார்.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் ஆகஸ்ட் 4 அன்று தொடங்குகிறது.
கவுன்டி செலக்ட் XI அணியுடனான 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி விளையாடுகிறது. டர்ஹமில் இன்று தொடங்கும் பயிற்சி ஆட்டத்தில் விக்கெட் கீப்பராக கே.எல். ராகுல் செயல்படவுள்ளார். கரோனா காரணமாகத் தனிமைப்படுத்தப்பட்ட ரிஷப் பந்த் இந்த ஆட்டத்தில் பங்கேற்கவில்லை. அதேபோல உதவிப் பயிற்சியாளர் தயானந்த் கரானிக்கு கரோனா ஏற்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவருடன் தொடர்பில் இருந்த சஹா தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக ராகுல் தேர்வாகியுள்ளார்.