இந்தியாவுடனான டெஸ்ட் தொடர்: பலம் வாய்ந்த இங்கிலாந்து அணி அறிவிப்பு
இந்தியாவுடனான முதலிரண்டு டெஸ்ட் ஆட்டங்களுக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுடனான முதலிரண்டு டெஸ்ட் ஆட்டங்களுக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4-ம் தேதி தொடங்குகிறது. முதலிரண்டு டெஸ்ட் ஆட்டங்களுக்கான 17 பேர் அடங்கிய அணியை மட்டும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தற்போது அறிவித்துள்ளது.
பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், சாம் கரன், ஆலி ராபின்சன் உள்ளிட்ட வீரர்கள் மீண்டும் டெஸ்ட் அணிக்குத் திரும்பியுள்ளனர். இதன்மூலம், பலம்வாய்ந்த அணியாக இங்கிலாந்து களமிறங்குகிறது.
அணி விவரம்:
- ஜோ ரூட் (கேப்டன்)
- ஜேம்ஸ் ஆண்டர்சன்
- ஜானி பேர்ஸ்டோவ்
- டாம் பெஸ்
- ஸ்டுவர்ட் பிராட்
- ரோரி பர்ன்ஸ்
- ஜோஸ் பட்லர்
- ஸாக் கிராலே
- சாம் கரன்
- ஹசீப் ஹமீத்
- டேன் லாரன்ஸ்
- ஜேக் லீச்
- ஆலி போப்
- ஆலி ராபின்சன்
- டாம் சிப்லே
- பென் ஸ்டோக்ஸ்
- மார்க் வுட்