முகப்பு
செய்திகள்

கிருனால் பாண்டியாவுக்கு கரோனா: இலங்கையுடனான டி20 ஒத்திவைப்பு

​இந்திய வீரர் கிருனால் பாண்டியாவுக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, இலங்கையுடனான 2-வது டி20 ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:46 AM
பகிர்:


இந்திய வீரர் கிருனால் பாண்டியாவுக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, இலங்கையுடனான 2-வது டி20 ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இலங்கை, இந்தியா அணிகளுக்கிடையிலான 2-வது டி20 ஆட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு நடைபெறவிருந்தது. இந்த நிலையில் இந்தியாவின் ஆல்-ரௌண்டர் கிருனால் பாண்டியாவுக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தது:

"கிருனால் பாண்டியாவுக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த டி20 ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மற்ற வீரர்கள் அனைவருக்கும் நோய்த் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டால் 2-வது டி20 ஆட்டம் புதன்கிழமை நடைபெறும். வீரர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.