பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து விலகுவதாக முன்னணி வீரர் ரோஜர் பெடரர் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.
நடப்பு பிரெஞ்சு ஓபனில் ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த முன்னணி வீரரான பெடரர் சனிக்கிழமை ஜெர்மனி வீரர் டொமினிக் கோப்ஃபெரை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த நிலையில் பிரெஞ்சு ஓபனிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.
இந்த முடிவு குறித்து பெடரர் கூறியது:
"எனது அணியுடனான ஆலோசனைக்குப் பிறகு பிரெஞ்சு ஓபன் போட்டியிலிருந்து விலகுவதாக இன்று முடிவெடுத்துள்ளேன். முழங்காலில் இரண்டு அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு ஓராண்டுக்கு மேல் குணமடைந்து வரும் நிலையில் எனது உடலுக்கு ஒத்துழைப்பு தருவது அவசியம். விரைவில் குணமடைவதற்கு என்னை நானே அவசரப்படுத்தக் கூடாது" என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.