படம் - instagram.com/kasi.b/ 
செய்திகள்

இரட்டைக் குழந்தைகளுக்குத் தந்தையானார் உசைன் போல்ட்

மின்னல் வேக மனிதர் என்று புகழப்படும் உசைன் போல்ட், இரட்டைக் குழந்தைகளுக்குத் தந்தையாகியுள்ளார்.

DIN

மின்னல் வேக மனிதர் என்று புகழப்படும் உசைன் போல்ட், இரட்டைக் குழந்தைகளுக்குத் தந்தையாகியுள்ளார்.

ஜமைக்காவைச் சேர்ந்த பிரபல ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட், 100 மீ. ஓட்டத்தை 9.58 விநாடிகளில் ஓடி உலக சாதனை செய்தவர். 100 மீ. ஓட்டம், 200 மீ. ஓட்டம், 4*100 தொடர் ஓட்டம் ஆகியவற்றில் உலக சாதனை படைத்து தன்னிகரற்ற தடகள வீரராக உள்ளார். ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் 8 முறை தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். 2008, 2012, 2016 என மூன்று ஒலிம்பிக்ஸ் போட்டிகளிலும் 100 மீ. ஓட்டம், 200 மீ. ஓட்டம் ஆகிய இரண்டிலும் தங்கப் பதக்கங்களை வென்று அரிய சாதனையையும் படைத்தவர். 2017 உலக சாம்பியன்ஷிப் போட்டிக்குப் பிறகு ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார்.

உசைன் போல்ட்டின் காதலி காசி பென்னட்டுக்குக் கடந்த வருடம் மே மாதம் பெண் குழந்தை பிறந்தது. உசைன் போல்ட் - காசி பென்னட் ஆகிய இருவரும் 2014 முதல் காதலித்து வருகிறார்கள். ஒலிம்பியா லைட்னிங் போல்ட் எனப் பெண் குழந்தைக்குப் பெயரிட்டார் உசைன் போல்ட்.

இந்நிலையில் தற்போது இரட்டை ஆண் குழந்தைகளுக்குத் தந்தையாகியுள்ளார் போல்ட். இம்முறையும் குழந்தைகளுக்கு - தண்டர் போல்ட், செயிண்ட் லியோ என வித்தியாசமான முறையில் பெயரிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

SCROLL FOR NEXT