செய்திகள்

இலங்கை சென்ற ஷிகர் தவன் தலைமையிலான இந்திய அணி

ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுவதற்காக ஷிகர் தவன் தலைமையிலான இந்திய அணி...

DIN

ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுவதற்காக ஷிகர் தவன் தலைமையிலான இந்திய அணி இலங்கைக்குச் சென்றுள்ளது. 

இந்திய அணி இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற முன்னணி வீரர்கள் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்பதால், இலங்கைக்கு எதிரான தொடர்களுக்கு ஷிகர் தவன் தலைமையிலான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. பயிற்சியாளராக முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். 

இரு வாரங்களுக்கு மும்பையில் உள்ள தனியார் விடுதியில் இந்திய வீரர்களும் பயிற்சியாளர்களும் தனிமைப்படுத்தப்பட்டார்கள். பிறகு ஒரு நாள் மற்றும் டி20 தொடரில் இலங்கை அணியுடன் விளையாடுவதற்காக இந்திய அணி இலங்கைக்குப் புறப்பட்டுச் சென்றது. 

இந்நிலையில் தனி விமானத்தில் சென்ற இந்திய அணி இலங்கைக்குச் சென்றடைந்தது. கொழும்பில் உள்ள தனியார் விடுதியில் மேலும் மூன்று நாள்களுக்கு இந்திய வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். அதன்பிறகு பயிற்சியைத் தொடங்குவார்கள்.

இந்தியா - இலங்கை அணிகள் பங்கேற்கும் ஒருநாள் தொடர், ஜூலை 13 அன்று தொடங்கி, ஜூலை 18 அன்று நிறைவுபெறுகிறது. டி20 தொடர் ஜூலை 21 அன்று தொடங்கி, ஜூலை 25 அன்று நிறைவுபெறுகிறது. அனைத்து ஆட்டங்களும் கொழும்பில் நடைபெறவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மயிலாடுதுறை ஆணவக் கொலை: பெண்ணின் தாய் உள்பட 4 பேர் சிறையிலடைப்பு!

ஷபானாவின் போலீஸ் போலீஸ் இணையத் தொடரின் வெளியீட்டுத் தேதி!

டிஜிட்டல் அரெஸ்ட்: ரூ. 80 லட்சத்தை இழந்த முதியவர்! இளைஞர் கைது!!

பெரியார் பிறந்த நாள்: தவெக தலைவர் விஜய் மரியாதை!

என் தொழிலைக் கெடுக்காதீங்க... ஆவேசமான விடிவி கணேஷ்!

SCROLL FOR NEXT