முதல் ஒருநாள்: இலங்கையை மீண்டும் எளிதாக வென்ற இங்கிலாந்து (ஹைலைட்ஸ் விடியோ)
இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
டாஸ் வென்ற இங்கிலாந்து ஃபீல்டிங்கை தோ்வு செய்ய, முதலில் பேட் செய்த இலங்கை 42.3 ஓவா்களில் 185 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக குசால் பெரேரா 73 ரன்கள் அடித்தாா். இங்கிலாந்தில் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகள் சாய்த்தாா்.
பின்னா் 186 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய இங்கிலாந்து 34.5 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் அடித்து வென்றது. அதிகபட்சமாக ஜோ ரூட் 79 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தாா். இலங்கையின் துஷ்மந்தா சமீரா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினாா்.