முகப்பு
செய்திகள்

பூம்ராவுக்குத் திருமணம்: விடுப்புக்கான காரணம் வெளியானது

இந்தியக் கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜாஸ்பிரீத் பூம்ராவுக்குத் திருமணம் நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
கோப்புப்படம்
பகிர்:

இந்தியக் கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜாஸ்பிரீத் பூம்ராவுக்குத் திருமணம் நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 4-வது டெஸ்ட் ஆட்டத்துக்கு முன்பு தனிப்பட்ட காரணத்துக்காக அணியிலிருந்து பூம்ரா விலகினார். 

இந்த நிலையில் அவருக்கு திருமணம் நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுபற்றி பிசிசிஐயின் தகவலறிந்த வட்டாரங்கள் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறியது:

"திருமணம் நடைபெறவுள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய விடுப்பு வேண்டும் என்றும் பிசிசிஐயிடம் பூம்ரா தெரிவித்தார்."

4-வது டெஸ்ட் ஆட்டத்திலிருந்து விடுப்பு கேட்ட அவருக்கு தொடர்ந்து நடைபெறவுள்ள 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

முழு கட்டுரையைப் படிக்க →