செய்திகள்

10,000 சர்வதேச ரன்கள்: இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் புதிய சாதனை

DIN

சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ரன்களைப் பூர்த்தி செய்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ்.

இந்திய கிரிக்கெட்டில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி, சர்வதேச அளவில் முன்னணி அணிகளில் ஒன்றாக இருப்பதற்கு முக்கியக் காரணமாக இருப்பவர், மூத்த வீராங்கனை மிதாலி ராஜ்.

ஒரு வீராங்கனையாகவும் கேப்டனாகவும் இந்திய மகளிர் கிரிக்கெட்டில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார் மிதாலி ராஜ். 1999-ம் ஆண்டு தனது முதல் ஒருநாள் கிரிக்கெட்டை விளையாடிய மிதாலி ராஜ் மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 200 ஒருநாள் ஆட்டங்களை விளையாடிய முதல் வீராங்கனை என்கிற சாதனையைச் சமீபத்தில் நிகழ்த்தினார். 2017-ல் மகளிர் ஒரு நாள் கிரிக்கெட்டில் 6,000 ரன்கள் குவித்த முதல் வீராங்கனை என்ற உலக சாதனையைப் படைத்தார். இதுவரை 10 டெஸ்டுகளிலும் 211 ஒருநாள், 89 டி20 ஆட்டங்களிலும் விளையாடியுள்ளார்.

2005, 2017 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிகளின் இறுதிச்சுற்றுகளில் இந்திய அணிக்குத் தலைமை தாங்கிய பெருமையும் மிதாலி ராஜுக்கு உண்டு.

சர்வதேச கிரிக்கெட்டில் தனது 21-வது வருடத்தைக் கடந்த ஜூன் மாத இறுதியில் பூர்த்தி செய்தார் மிதாலி. இவ்வளவு காலம் வேறு எந்த வீராங்கனையும் சர்வதேச கிரிக்கெட்டில் நீடித்ததில்லை என்பதே அவருடைய பெருமையை நன்கு உணர்த்தும். 1999, ஜூன் 26 அன்று, 16 வயதில் அயர்லாந்து அணிக்கு எதிராகச் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார் மிதாலி ராஜ். ஜெட் வேகத்தில் 21 வருடங்கள் ஓடிவிட்டன. 

இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தில் 36 ரன்களை எடுத்தபோது சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ரன்களைப் பூர்த்தி செய்தார் மிதாலி ராஜ்.

சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ரன்களை எடுத்த 2-வது வீராங்கனை மற்றும் முதல் இந்திய வீராங்கனை ஆகிய பெருமைகளை அவர் பெற்றுள்ளார். இங்கிலாந்தைச் சேர்ந்த சார்லோட் எட்வர்ட்ஸ் முதல் வீராங்கனையாக 10,000 ரன்கள் எடுத்துள்ளார். அவர் 309 ஆட்டங்களில் 10,273 ரன்கள் எடுத்துள்ளார். 

சர்வதேச கிரிக்கெட்டில் மிதாலி ராஜ் - 10,001 ரன்கள், சராசரி - 46.73

டெஸ்டுகள்: 663 ரன்கள், சராசரி 51.00
ஒருநாள்: 6974 ரன்கள், சராசரி 50.53
டி20: 2364 ரன்கள், சராசரி 37.52
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமானிகள் பற்றாக்குறை... ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் சேவை குறைப்பு

தென் சென்னை வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி பழுது!

அடுத்த 2 மணிநேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழை பெய்யும்!

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

SCROLL FOR NEXT