செய்திகள்

பாட்னர்ஷிப்பில் 5,000 ரன்கள்: ரோஹித் - தவான் சாதனை

​ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் இணைந்து 5,000 ரன்கள் என்ற மைல்கல்லை ஞாயிற்றுக்கிழமை எட்டினர்.

DIN


ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் இணைந்து 5,000 ரன்கள் என்ற மைல்கல்லை ஞாயிற்றுக்கிழமை எட்டினர்.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் ஆட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து இந்த முறையும் இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது. 

தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கிய ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் தொடக்கம் முதலே துரிதமாக ரன் சேர்த்து விளையாடினர். இதனால், இந்திய அணியின் ரன் ரேட் ஓவருக்கு 6.5 ரன்களுக்கு மேல் நீடித்து வந்தது. 14 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி 100 ரன்களை எட்டியது இந்திய அணி.

இதன்மூலம், ஒருநாள் கிரிக்கெட்டில் பாட்னர்ஷிப்பில் 5,000 ரன்கள் என்ற மைல்கல்லை இந்த இணை எட்டியது. 

சச்சின் டெண்டுல்கர் மற்றும் சௌரவ் கங்குலிக்கு அடுத்தபடியாக ஒருநாள் கிரிக்கெட்டில் பாட்னர்ஷிப்பில் 5,000 ரன்களை எட்டும் இரண்டாவது இந்திய இணை ரோஹித் - தவான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேர்தலுக்கு பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள்: பிரசாந்த் கிஷோர்

தீப்பிடிக்குதே... ஆஞ்சல் முஞ்சால்!

திரிம்பகேஷ்வரில் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்

தந்தை மறைந்த ஒரே நாளில் இலங்கை அணியுடன் மீண்டும் இணைந்த துனித் வெல்லாலகே!

மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது!

SCROLL FOR NEXT